தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பொன்னேரி அருகே கஞ்சா பறிமுதல் - Tiruvallur 15 kg of cannabis was seized

திருவள்ளூர்: திருவள்ளூர், பொன்னேரி அருகே சுமார் 15 கிலோ கஞ்சா, தேர்தல் பறக்கும் படையினரின் வாகன சோதனையின்போது சிக்கியது.

15 கிலோ கஞ்சா சிக்கியது
15 கிலோ கஞ்சா சிக்கியது

By

Published : Mar 6, 2021, 10:50 PM IST

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் வட்டாட்சியர் செல்வகுமார், கவரப்பேட்டை காவல் உதவி ஆய்வாளர் பாபு, காவலர்கள் சுரேஷ், ராமதாஸ், பாண்டியம்மாள் கொண்ட குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது ஆந்திர மாநிலம், நெல்லூரிலிருந்து சென்னைக்கு வந்த அரசுப் பேருந்தை மடக்கிச் சோதனையிட்டனர்.

அப்போது பேருந்தில் பயணம்செய்த தேனி, கருமாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ராஜா (48) என்பவரைச் சோதனை செய்ததில் அவரிடமிருந்து 15 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.

இது குறித்து கவரைப்பேட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்துவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details