தமிழ்நாட்டில் உள்ள ஏரிகளைத் தூர்வாரி சீரமைக்க குடிமராமத்துப் பணிகளை முதலமைச்சர் தொடங்கிவைத்தார். மேலும் நீர்நிலைகளை சீரமைக்க தன்னார்வலர்களும் பொதுமக்களும் முன்வரலாம் என்று தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து பல்வேறு தன்னார்வலர்கள் அவர்கள் வசிக்கின்ற பகுதிகளில் இருக்கிற நீர்நிலைகளை சீரமைத்து வந்தனர். இதன் ஓர் அங்கமாக சென்னைக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் போரூர் ஏரியைச் சீரமைக்க தன்னார்வலர்கள் முடிவு செய்தனர்.
அதன் படி கடந்த ஜூலை மாதம் 20ஆம் தேதி முதல் மூன்று கட்டமாக ஏரியைச் சீரமைக்க முடிவு செய்து ஏரியில் உள்ள குப்பைகள், கருவேல மரங்களை அகற்றினர்.