திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது இந்த முகாம் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில் நடைபெற்றது.
இந்த முகாமை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர் பேசும்போது,

”புற உலக சிந்தனையற்றோர், மூளை வளர்ச்சி குறைபாடு, உடல் இயக்கம் குறைபாடுகள் உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகள் உள்ள 3 ஆயிரத்து 699 குழந்தைகள் திருவள்ளூர் மாவட்டத்தில் கண்டறியப்பட்டுள்ளனர். அவர்கள் பாதுகாக்கப்பட்டு தொடர் கண்காணிப்பில் உள்ளனர்” என்றார்
இந்த நிகழ்வில், அவர்களுக்கு சிறப்பு பயிற்சிகள், மருத்துவ உதவிகள், உதவி உபகரணங்கள், தேசிய அடையாள அட்டை ஆகியவை வழங்கப்பட்டன. மேலும் இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாற்றுத்திறனாளி அலுவலர்கள், வருவாய் துறையினர் கலந்துகொண்டனர்.