திருநெல்வேலி மாவட்டம் களக்காட்டில் பெண் காவலராக பணியாற்றி வருபவர் தங்கராணி (37). இவருக்கும், ராதாபுரத்தில் மளிகைக் கடை நடத்தி வந்த சிவ பிரேம்குமார் (40) என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. அந்த சமயத்தில், தங்கராணியிடம் இருந்து 7 லட்சம் ரூபாய், 10 சவரன் நகைகளை சிவ பிரேம்குமார் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு கணவன் - மனைவி இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். இதனிடையே தங்கராணி, சிவ பிரேம்குமாரிடம் கொடுத்ததாகக் கூறப்படும் 7 லட்சம் ரூபாய், நகைகளை திருப்பிக் கேட்டுள்ளார். பணத்தையும் நகைகளையும் திருப்பிக் கொடுக்க மறுத்து வந்த சிவ பிரேம்குமார், பெண் காவலர் தங்க ராணியை தகாத வார்த்தைகளால் திட்டியதாகக் கூறப்படுகிறது.