தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாபநாசம் அணையிலிருந்து திறக்கப்பட்ட நீர் - உரியமுறையில் விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள உத்தரவு - நீர் திறப்பு

பாபநாசம் அணையில் இருந்து விவசாயம் மற்றும் குடிநீர் தேவைக்காக நேற்று(நவ.01) நீர் திறக்கப்பட்டது.

papanasam dam  water opening  water opening from papanasam dam  thirunelveli news  thirunelveli latest news  திருநெல்வேலி செய்திகள்  பாபநாசம் அணை  பாபநாசம் அணையிலிருந்து நீர் திறப்பு  நீர் திறப்பு  அப்பாவு
பாபநாசம் அணை

By

Published : Nov 2, 2021, 3:26 PM IST

திருநெல்வேலி: வடகிழக்குப் பருவமழை, வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி, குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக மாவட்டத்தின் பிரதான அணைகளான பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்து நீர்மட்டமும் உயர்ந்துள்ளது.

143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் தற்போதைய நிலவரப்படி, 135.45 அடியாக தற்போதைய நீர்மட்டம் உள்ளது. அணைக்கு விநாடிக்கு 1,308 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் தாமிரபரணி ஆற்றின் கீழ் உள்ள வடக்கு கோடை மேலழகியான், தெற்கு கோடை மேலழகியான், நதியுண்ணி கால்வாய், கன்னடியன் கால்வாய், கோடகன் கால்வாய் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் மருதூர் மேலக்கால்வாய், கீழ கால்வாய், தெற்கு மற்றும் வடக்கு பிரதான கால்வாய் ஆகியவற்றின் கீழ் உள்ள நேரடி மற்றும் மறைமுக பாசனப்பரப்புகளுக்கு பிசான பருவ சாகுபடிக்கும்; பொதுமக்களின் குடிநீர் மற்றும் இதரத் தேவைகளுக்காக நேற்று (நவ.1) பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் இருந்து நீர் திறக்கப்பட்டது.

நீர் திறப்பின் பயன்

பாபநாசம் அணையில் இருந்து சபாநாயகர் அப்பாவு நீரைத் திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு பேசியதாவது, 'முதலமைச்சரின் உத்தரவைத் தொடர்ந்து, பாபநாசம் அணையில் பிசானசாகுபடி மற்றும் குடிநீர் தேவைக்காக நீர் திறக்கப்பட்டுள்ளது. தேவைக்கேற்ப தற்போது 1,400 கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

நீர் திறப்பு

இதன்மூலம் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் 86.107 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் மற்றும் 185 குளங்கள் பயன்பெறும். மேலும் மாவட்டத்தில் 76 வேளாண் தொடக்க கூட்டுறவு வங்கிகள் உள்ளன.

இந்த வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு நஞ்சை பயிருக்கு 30 ஆயிரமும், வாழைக்கு 69 ஆயிரமும் வட்டியில்லா கடன் வழங்கப்படுகிறது. விவசாயிகளுக்கு உடனடியாக கடன் வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். எனவே, இதனை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்' என கேட்டுக்கொண்டுள்ளார்.

இதையும் படிங்க: 'சமுதாயத்திற்கு பயன்படும் ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம்' - அண்ணா பல்கலை துணைவேந்தர்

ABOUT THE AUTHOR

...view details