திருநெல்வேலி: மானூர் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயம் அதிகளவில் செய்யப்பட்டு வருகிறது. மானூர் தாலுகாவிற்கு உட்பட்ட வெள்ளப்பநேரி கிராமத்தில் வெண்டைக்காய் உள்ளிட்ட காய்கறிகளை பயிர் செய்து நெல்லை பகுதியில் உள்ள மொத்த காய்கறி சந்தைகளில் விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் வெண்டைக்காய்க்கு மொத்த காய்கறி சந்தைகளில் போதிய விலை இல்லாததால் மனமுடைந்த விவசாயி ஒருவர் வெண்டைக்காய்களை சாலையில் கொட்டிச் செல்லும் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. சாலைகளில் வெண்டைக்காய் கொட்டிய விவசாயி பேசும் வீடியோவும் தற்போது சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.
அதில் வெண்டைக்காய் பயிருக்கு இதுவரை 30ஆயிரம் ரூபாய் செலவு செய்துள்ளதாகவும், அதனை பறித்தெடுக்க வரும் வேலையாள்களுக்கு தலா ரூ.300 ஊதியமாக வழங்கும் நிலையில், தற்போது 5 நபர்கள் வரை பணி செய்தால் மட்டுமே வெண்டைக்காயை பறித்து மார்க்கெட்டுக்கு கொண்டு செல்ல முடியும்.