தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பல் பிடுங்கிய விவகாரம் - ஐபிஎஸ்ஸை கீழ்நிலை அதிகாரி விசாரித்தால் எப்படி நியாயம் கிடைக்கும்?:வழக்கறிஞர் கேள்வி - The Cbcid Police Have Registered A Case

அம்பாசமுத்திரம் பகுதிகளில் விசாரணைக் கைதிகள் பல் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் பாதிக்கப்பட்ட சிறுவன் மற்றும் அவரது பெற்றோர் சிபிசிஐடி விசாரணைக்கு இன்று ஆஜராகினர்.

Etv Bharat செய்தியாளர்களைச் சந்தித்த வழக்கறிஞர்
Etv Bharat செய்தியாளர்களைச் சந்தித்த வழக்கறிஞர்

By

Published : May 5, 2023, 5:36 PM IST

செய்தியாளர்களைச் சந்தித்த வழக்கறிஞர்

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்டத்தில் உள்ள அம்பாசமுத்திரம், விக்கிரமசிங்கபுரம், கல்லிடைக்குறிச்சி காவல் நிலையங்களில் விசாரணைக்கு வந்தவர்களின் பற்கள் பிடுங்கியது சம்பந்தமாக புகார்கள் வந்ததின் பேரில், அம்பாசமுத்திரம் ஏஎஸ்பி பல்வீர் சிங் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

இதனையடுத்து இந்த வழக்கை விசாரிப்பதற்காக சேரன்மகாதேவி சார் ஆட்சியர் முகமது சபீர் ஆலம் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அவரது தரப்பில் தரப்பட்ட இடைக்கால அறிக்கையில், அடிப்படையில் மாவட்டா ஆட்சியர் உயர் மட்ட விசாரணைக்கு பரிந்துரைத்தார். அதைத்தொடர்ந்து தமிழ்நாடு அரசால் நியமிக்கப்பட்ட மூத்த ஐஏஎஸ் அதிகாரி அமுதா விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டு, விசாரணையை நடத்தினார்.

இந்த நிலையில் நெல்லை மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினர், சுபாஷ் என்பவரின் புகாரின் பேரில் பல்வீர் சிங் மீது நான்கு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்திருந்தனர். மூத்த ஐஏஎஸ் அதிகாரி அமுதாவின் இரண்டு கட்ட விசாரணை அறிக்கையின்படி, இந்த வழக்கானது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

விசாரணை அதிகாரியாக சிபிசிஐடி காவல் ஆய்வாளர் உலக ராணி நியமிக்கப்பட்டார். அவர் இந்த வழக்கு விசாரணை சம்பந்தமாக புகார் கொடுத்த சுபாஷ் மற்றும் பலரிடமும் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திலும் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த நிலையில் இந்த வழக்கை விசாரிப்பதற்காக மேலும் சிபிசிஐடி திட்டமிட்ட குற்றங்கள் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சங்கரும் நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில் அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் அருண்குமார் என்பவர் கொடுத்தப்புகாரின் அடிப்படையில் சிபிசிஐடி காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கு சிபிசிடிஐ-க்கு மாற்றப்பட்டு, இந்த வழக்கை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சங்கர் விசாரணைக்கு எடுத்துக்கொண்டு, பல்வீர் சிங் மற்றும் சில காவலர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்தார்.

மேலும் விக்கிரமசிங்கபுரம் காவல் நிலையத்தில் வேதநாராயணன் என்பவர் கொடுத்தப் புகாரின் பேரில், சிபிசிஐடி காவல் ஆய்வாளர் விஜயலட்சுமி, பல்வீர் சிங் மீது மற்றொரு வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார். இந்த இரண்டு வழக்குகள் சம்பந்தமாக விசாரணைக்கு ஆஜராகுமாறு கணேசன், அருண்குமார், இரண்டு சிறார்கள், ராசு , மகேந்திரன், சாம் ஆகியோர் இன்று ( மே 05 ) நெல்லை சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணை அதிகாரிகள் முன்னிலையில் ஆஜராக சம்மன் வழங்கப்பட்டது.

அதன்படி, சிபிசிஐடி அலுவலகத்தில் இன்று விசாரணை தொடங்கியது. புகார் கொடுத்த அருண்குமாரின் தாயார் ராஜேஸ்வரி மற்றும் அவரது தந்தை கண்ணன் ஆகியோர் வழக்கறிஞருடன் விசாரணை அதிகாரி ஏடிஎஸ்பி சங்கர் முன்னிலையில் ஆஜர் ஆகியுள்ளனர். தங்களுக்கு ஐஜி அளவில் இந்த விசாரணை நடத்த வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதற்கிடையில் இந்த விவகாரம் தொடர்பாக மேலும் மூன்று காவலர்கள் மீது சிபிசிஐடி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அதன்படி அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்டத்தில் பற்கள் பிடுங்கியது சம்பந்தமான விசாரணையில் விக்கிரமசிங்கபுரம் காவல் நிலையத்தில் வேத நாராயணன் கொடுத்தப் புகாரில் காவலர்கள் மணிகண்டன், விக்னேஷ் மற்றும் விக்கிரமசிங்கபுரம் காவல் உதவி ஆய்வாளர் முருகேசன் ஆகியோர்களின் மீது ஐந்து பிரிவுகளின்கீழ், சிபிசிஐடி ஆய்வாளர் விஜயலட்சுமி வழக்குப்பதிவு செய்துள்ளார்.

முன்னதாக இது குறித்து பாதிக்கப்பட்ட அருண்குமாரின் வழக்கறிஞர் பாண்டியராஜன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ''அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்வு தொடர்பாக அருண்குமார் கொடுத்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 50 நாட்கள் கழித்து பல்வீர் சிங் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் தான் தொடர்ந்து விசாரணைக்கு அழைக்கப்படுகின்றனர். இதுவரை ஐபிஎஸ் அதிகாரி கைது செய்யப்படவில்லை.

இந்த வழக்கை மேற்பார்வை செய்ய ஒரு அதிகாரியை நியமனம் செய்ய வேண்டும். பற்கள் பிடுங்கியதாக சிபிசிஐடி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்த மூன்று வழக்கை மேற்பார்வை செய்ய ஐஜி, அல்லது டிஐஜி அந்தஸ்தில் மூத்த ஐபிஎஸ் அதிகாரி நியமனம் செய்ய வேண்டும். ஐபிஎஸ்ஸை கீழ்நிலை அதிகாரி விசாரித்தால் எப்படி நியாயம் கிடைக்கும்.

சாட்சிகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். இந்த வழக்கில் அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, விக்கிரமசிங்கபுரம் காவல் நிலையங்களில் சித்ரவதை செய்த, அப்போதைய மூன்று காவல் ஆய்வாளர்கள் குற்றவாளிகளாக சேர்க்கப்பட வேண்டும்.

வழக்கு ஆவணங்கள் தொடர்பாக கேட்கப்படும் கேள்விகளுக்கு உரிய பதில் கிடைப்பதில்லை. நீதித்துறையும் மருத்துவத்துறையும் ஐபிஎஸ் அதிகாரிக்கு ஆதரவாகவே செயல்படுகிறது. சிபிசிஐடி தரப்பில் இருந்து புகார் கொடுத்த அருண்குமாருக்கு மட்டும் சம்மன் கொடுக்கப்பட்டது. அச்சுறுத்தல் இருப்பதால் பாதிக்கப்பட்டவர்கள் ஆஜராகவில்லை” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:சிங்கப்பூரில் வேலை வாங்கித்தருவதாக ரூ.45 லட்சம் மோசடி: புதுக்கோட்டை எஸ்.பியிடம் இளைஞர்கள் புகார்!

ABOUT THE AUTHOR

...view details