திருநெல்வேலி: கூடன்குளத்தில் இந்திய - ரஷ்யா நாடுகளுக்கிடையே ஒப்பந்த அடிப்படையில் இரண்டு அணு உலைகள் இயங்கி வருகின்றன. மேலும் 3 மற்றும் 4 ஆவது அணு உலைகளின் பணிகள் சுமார் 80 விழுக்காடு முடிவடைந்து கூடுதல் பணிகள் நடந்து வருகிறது.
இந்நிலையில் அணு உலைகள் தடையின்றி செயல்படுவதற்கு ஆண்டுதோறும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் எரிபொருள் நிரப்பும் பணிகள் மற்றும் பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதற்காக சுமார் 55 நாள்கள் வரை பணிகள் நிறுத்தப்பட்டு பின்னர் அவை இயக்கப்படுவது வழக்கம்.
அதனடிப்படையில் கடந்த மார்ச் 25 ஆம் தேதி பராமரிப்பு மற்றும் எரிபொருள் நிரப்பும் பணிகளுக்காக 2ஆவது அணு உலையில் பணிகள் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் பராமரிப்பு பணிகள் சுமார் 90 விழுக்காடு முடிவடைந்த நிலையில் செறிவூட்டப்பட்ட யுரேனியம் ரஷ்யாவிலிருந்து பலத்த பாதுகாப்புடன் கூடன்குளம் அணு மின் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.
அதனைத் தொடர்ந்து வரும் ஜூன் 1 ஆம் தேதி முதல் 2 ஆவது அணு உலையில் மின் உற்பத்தி தொடங்கும் என அணு உலை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க:மீண்டும் இலங்கைக்கு நிவாரணம்; மாவட்ட ஆட்சியர் ஆய்வு