தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஜல்லிக்கட்டை ரத்து செய்து விடுவார்கள்- அமித் ஷா - latest news

தமிழ்நாட்டின் கலாசாரத்தை உலகம் முழுவதும் பறைசாற்றி வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி. அதிமுக- பாஜக தமிழ்நாட்டிற்காக பாடுபடுகிறது. திமுக - காங்கிரஸ் குடும்பத்திற்காகப் பாடுபடுகிறது. உதயநிதி ஸ்டாலினை முதல்வராக்க திமுக முயற்சித்து வருகிறது. இது மக்கள் ஆட்சிக்கும், குடும்ப ஆட்சிக்கும் இடையே நடக்கும் தேர்தல். 10 ஆண்டுகளாக சாமானியரின் ஆட்சி நடந்து வருகிறது. திமுக - காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஜல்லிக்கட்டு அனுமதியை ரத்து செய்துவிடுவார்கள் என்று அமித் ஷா கூறினார்.

பரப்புரைக் பொதுக்கூட்டத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா பங்கேற்பு
பரப்புரைக் பொதுக்கூட்டத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா பங்கேற்பு

By

Published : Apr 3, 2021, 5:28 PM IST

நெல்லை மாவட்டம் நெல்லை சட்டப்பேரவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மற்றும் நாங்குநேரி தொகுதி அதிமுக வேட்பாளர் தச்சை கணேசராஜாவை ஆதரித்து நெல்லை மாவட்ட பாஜக சார்பில் தச்சநல்லூரில் நடைபெற்ற பரப்புரைக் பொதுக்கூட்டத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா பங்கேற்றார்.

இக்கூட்டத்தில் அவர் கூறுகையில், ‘’கோயில் நகரமாகிய திருநெல்வேலிக்கு வந்திருப்பதில் நான் பெருமை அடைகிறேன். இந்தப் பூமி தர்ம பூமி, மோட்ச பூமி. வீரபான்டிய கட்ட பொம்மன் பற்றி செல்லும் இடங்கள் எல்லாம் பேசி வருகிறேன்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இந்தத் தேர்தலில் குடும்ப ஆட்சிக்கு முடிவு செய்து எம்ஜிஆரின் ஆட்சியை கொண்டுவர வேண்டும்.

இந்தத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் ராகுல் காந்தி தலைமையிலான முற்போக்கு கூட்டணிக்கு இடையேதான் போட்டி. நரேந்திர மோடி சாதாரணமான நிலையில் இருந்து உலகமே பாராட்டும் பிரதமராக உயர்ந்துள்ளார்.

அதேபோல், சாதாரண ஏழை விவசாயி மகனாக பிறந்து தனது உழைப்பால் முதலமைச்சரானவர் எடப்பாடி பழனிசாமி. பிரதமருக்கு மீனவர்கள் விவசாயிகள் ஏழைகள் பற்றி கவலை. ஆனால் ஸ்டாலினுக்கு தனது மகனை பற்றி மட்டும் தான் கவலை, மகனை எப்படியாவது முதலமைச்சராக்க வேண்டும் என்ற கவலை. ஸ்டாலினிடம் கோபமும் ஊழலும் வளர்ந்து வருகிறது.

தமிழ்நாட்டின் கலாசாரத்தை உலகம் முழுவதும் பறைசாற்றி வருகிறார் பிரதமர். அதிமுக - பாஜக தமிழ்நாட்டிற்காக பாடுபடுகிறது. திமுக - காங்கிரஸ் குடும்பத்திற்காகப் பாடுபடுகிறது. உதயநிதி ஸ்டாலினை முதலமைச்சராக்க திமுக முயற்சித்து வருகிறது.

இது மக்கள் ஆட்சிக்கும், குடும்ப ஆட்சிக்கும் இடையே நடக்கும் தேர்தல். 10 ஆண்டுகளாக சாமானியரின் ஆட்சி நடந்து வருகிறது. திமுக - காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஜல்லிக்கட்டு அனுமதியை ரத்து செய்துவிடுவார்கள்” என்றார்.

இந்தப் பொதுக்கூட்டத்தில் அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: 'நீ ஜெய்ச்சுருவ'- திமுக வேட்பாளரின் தலையில் திருநீறு அடித்த பூசாரி

ABOUT THE AUTHOR

...view details