நெல்லை மாவட்டம் மானூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட ராமையன்பட்டி அருகே காவல் ஆய்வாளர் ராமர் தலைமையிலான, காவலர்கள் வாகனத தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். சோதனையில் சரக்கு வாகனம் மூலம் இரண்டு டன் அளவிலான ரேஷன் அரிசி கேரளாவிற்கு கடத்திச் செல்லப்படுவது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து வாகனத்தில் வந்த மேலதாழையூத்து பகுதியைச் சேர்ந்த மஜீத் (29), சுந்தரபாண்டி (25) ஆகியோரை கைது செய்த காவல்துறையினர், கடத்தலுக்கு பயன்படுத்திய சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசரணையில் ஈடுபட்டுள்ளனர். முன்னதாக நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் ரோந்துப் பணியை தீவிரப்படுத்தும்படி அனைத்து காவல் நிலையங்களுக்கும் உத்தரவிட்டதைத் தொடர்ந்து கடத்தல் சம்பவங்களில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:இலங்கைக்கு கடத்த முயன்ற கடல் அட்டை, மஞ்சள் பறிமுதல்