நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியைச் சேர்ந்தவர் செல்லப்பா மகன் முருகன். கொத்தனார் வேலை செய்துவந்த இவர், தென்காசி அருகே சுந்தரபாண்டிபுரத்தில் உள்ள அவரது குலதெய்வக் கோயில் திருவிழாவிற்காக தனது உறவினர் மாரியப்பனுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார்.
அரசுப் பேருந்து மோதி இருவர் பலி; நெல்லையில் பரிதாபம்! - two wheeler accident
நெல்லை: ஆலங்குளம் அருகே இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
அப்போது, தென்காசியிலிருந்து திருநெல்வேலி நோக்கிச் சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்து ஆலங்குளம் அருகே உள்ள அத்தியூத்து விலக்கு அருகே எதிரே இவர்களின் இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் சேரன்மகாதேவியைச் சேர்ந்த முருகன், அவருடன் சென்ற மாரியப்பன் ஆகிய இருவரும் தூக்கி விசப்பட்டு ரத்த வெள்ளத்தில் துடித்தனர்.
இதில் முருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிக் கொண்டிருந்த மாரியப்பனை காவல்துறையினர் மீட்டு ஆலங்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவரும் உயிரிழந்தார். மேலும், இந்த விபத்து குறித்து ஆலங்குளம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.