தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நெல்லையில் 45 சவரன் நகை திருட்டு - அதிமுகவை சேர்ந்த இருவர் கைது

நெல்லையில் சுமார் 46 சவரன் நகை திருட்டு வழக்கில் அதிமுக நிர்வாகிகள் இருவரை போலீசார் கைது செய்தனர்.

நெல்லையில் அதிமுகவை சேர்ந்த இருவர் நகை திருட்டு வழக்கில் கைது
நெல்லையில் அதிமுகவை சேர்ந்த இருவர் நகை திருட்டு வழக்கில் கைது

By

Published : Jun 18, 2022, 11:45 AM IST

நெல்லை: பாளையங்கோட்டை சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் திவ்யா யாதவ். இவர் கீழ நத்தத்தில் உள்ள தனது உறவினர் நம்பி என்பவரது வீட்டிற்கு கோவில் விழாவிற்காக சென்றுள்ளார். அப்போது நம்பி வீட்டின் பீரோவில் இருந்த சுமார் 46 பவுன் நகைகளை திருடிச் சென்றுள்ளார். இதுதொடர்பாக தொல்காப்பியம் காவல் நிலையத்தில் நம்பி புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீசார் விசாரணையில் இறங்கியபோது சம்பவத்தன்று திவ்யா யாதவ் அங்கு சென்றதன் அடிப்படையில் அவரிடம் விசாரித்துள்ளனர். அதில் நம்பி வீட்டில் இருந்த நகைகளை திருடியதை திவ்யா யாதவ் ஒப்புக் கொண்டார். மேலும் திருடிய நகைகளை நெல்லை மாவட்ட அதிமுக அம்மா பேரவை துணை செயலாளர் பாண்டியராஜன் மூலம் வங்கியில் அடகு வைத்துள்ளார்

இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து இருவரையும் தாலுகா போலீசார் கைது செய்தனர். மேலும் வங்கியில் உள்ள நகைகளை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். திருட்டு வழக்கில் அதிமுகவை சேர்ந்த பெண் பிரமுகர் மற்றும் அம்மா பேரவை மாவட்ட துணை செயலாளர் இருவரும் கூட்டாக கைதான சம்பவம் நெல்லை மாவட்ட அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:நெல்லை அருகே வம்பிழுத்த காமெடி நடிகர்: கார் கண்ணாடி உடைப்பு

ABOUT THE AUTHOR

...view details