புரட்சியாளர் லெனினின் 149ஆவது பிறந்தநாளை முன்னிட்டு நெல்லையில் உள்ள இந்தியாவின் உயரமான லெனின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமைக் குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் நெல்லை வந்தார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”மக்களவைத் தேர்தலின் இரண்டுகட்டம் முடிவடைந்து நாளை மூன்றாவது கட்டம் நடைபெற உள்ளது.
தமிழ்நாடு முழுவதும் எதிர்ப்பு அலை: ஜி.ராமகிருஷ்ணன் - lenin birthday
நெல்லை: தமிழ்நாடு முழுவதும் மோடி மற்றும் அதிமுக எதிர்ப்பு அலை ஏற்பட்டுள்ளது என நெல்லையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமைக் குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.
மே 19ஆம் தேதி தமிழ்நாட்டில் நான்கு சட்டப்பேரவை தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த மக்களவைத் தேர்தல் மத்தியில் மட்டுமல்ல மாநிலத்திலும் ஆட்சி மாற்றத்தை கொண்டுவரும் என நம்புகிறோம். மதுரையில் தேர்தல் அதிகாரியின் அனுமதி இல்லாமல் எப்படி வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்திருந்த அறைக்குள் அரசு அதிகாரி நுழைய முடியும். மதுரையில் நடைபெற்ற இந்த சம்பவம் இதுபோன்ற பல கேள்விகளை எழும்புகிறது. தற்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகளை பணி இடைநீக்கம் செய்துள்ளனர் அவை மட்டும் போதாது. மதுரையில் தற்போது உள்ள மாவட்ட ஆட்சியரை பணியிட மாற்றம் செய்ய வேண்டும்.
தமிழ்நாடு முழுவதும் மோடி மற்றும் அதிமுக எதிர்ப்பு அலை ஏற்பட்டுள்ளது. எனவே மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி நிச்சயமாக வெற்றி பெறும். இலங்கையில் நடைபெற்ற சம்பவத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வருத்தம் தெரிவிக்கிறோம்” என்றார்.