மதுரையில் உள்ள அம்மா கோயிலில் வைத்து முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா பிறந்த தினம் நிகழ்வுகளை முன்னிட்டு 51 ஏழை எளிய தம்பதிகளுக்கு திருமணம் செய்து வைக்கும் நிகழ்வு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற உள்ளது.
அதற்கான அழைப்புகள் வழங்கும் நிகழ்ச்சி முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் நெல்லை அதிமுக மாவட்ட கழக அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் பிறந்த நாளை முன்னிட்டு ஏழை எளிய குடும்பத்தை சேர்ந்த 51 தம்பதிகளுக்கு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மதுரையில் உள்ள அம்மா கோயிலில் வைத்து பிப்ரவரி 23ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. அன்றைய தினமே தனது மகளுக்கும் திருமண நடைபெற உள்ளதாகவும் தெரிவித்தார்.
அதற்கான அழைப்பிதழ் வழங்கும் நிகழ்ச்சி இன்றைய தினம் நடைபெற்றது. இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் அதிமுக மாவட்ட மாநில கழக நிர்வாகிகள் பங்கேற்றுள்ளதாக தெரிவித்தார். போதை பொருள் இல்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்ற வேண்டும் என முதலமைச்சர் நேற்றைய தினம் ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளார்.
ஆனால் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பே சட்டமன்றத்தில் போதையில்லா தமிழகத்தை உருவாக்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக உரை நிகழ்த்தி உள்ளார். தமிழகத்தில் நடைபெறும் மக்கள் விரோத செயல்பாடுகளுக்கு இடதுசாரி அமைப்புகள் எதுவும் எந்தவிதமான போராட்டமும் நடத்தவில்லை. அவர்களுக்கு என்ன கொடுக்கப்பட்டது என்பதும் தெரியவில்லை.
இடதுசாரி கட்சிகள் மௌனம் சாதித்து வருகிறது. திமுகவை எதிர்த்து எந்த கட்சிகளும் எதிர் கேள்விகள் கேட்க தயங்கி வருகிறது. அதிமுக என்ற ஒரே கட்சி மட்டுமே திமுகவை எதிர்த்து பல்வேறு கேள்விகள் எழுப்பி போராட்டங்களை நடத்தி வருகிறது. கடந்த ஆட்சியை திமுக முடிவு செய்து செல்லும்போது ஒன்றரை லட்சம் கோடி கடனாக விட்டுச் சென்றார்கள்.
தற்போது நடைபெற்று வரும் திமுக ஆட்சியின் 19 ஆண்டு காலத்தில் விண்ணை முற்று அளவு கடன் உயர்ந்துள்ளது. தமிழக நிதி அமைச்சர் இடம் முதலமைச்சர் எந்த கேள்வியும் கேட்க முடியாது நிலை உள்ளது. 2021 - 22 ஆம் ஆண்டு மட்டும் திமுக ஆட்சி காலத்தில் ஒரு லட்சத்து 8,000 கோடி கடன் பெற்றுள்ளதாக நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார். 19 மாத ஆட்சி காலத்தில் திமுக அளித்த தேர்தல் அறிக்கையில் எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை, மானிய கோரிக்கையில் அளித்த எந்த அறிவிப்புகளையும் நிறைவேற்றவில்லை, 110 விதியின் கீழ் வெளியிட்ட அறிவிப்புகளையும் நிறைவேற்றவில்லை என்றார்.
தற்போது 2 லட்சத்து 28,000 கோடி அளவு திமுக ஆட்சியில் கடன் உயர்ந்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தில் மக்கள் உரிமைக்காக குரல் எழுப்பினாலும் தகுந்த பதிலை தமிழக சட்டமன்றத்தில் கொடுக்க மறுக்கிறார்கள். சட்டமன்றத்தில் பதில் கிடைக்காததால் தான், அதிமுக சார்பில் மக்கள் மன்றத்தில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. விற்பனை பள்ளி கல்லூரி அருகே அதிகம் நடைபெறுகிறது.
வெளி மாநிலத்தின் புள்ளிவிபரங்களை சட்டமன்றத்தில் சொல்கிறார்களே தவிர தமிழகத்தின் நிலை குறித்து சட்டமன்றத்தில் வாய் திறப்பதே இல்லை, திமுகவினர் வாய்ச்சொல் வீரர்களாக மட்டுமே உள்ளனர். பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பு இல்லாத நிலை தமிழகத்தில் உள்ளது.
ஒரு பானை சோற்றிற்கு ஒரு சோறு பதம் என்பதைப் போல திமுக ஆட்சியில் உள்ள சட்டம் ஒழுங்கு நிலை தெரிய வந்துள்ளது என தெரிவித்தார்.
இதையும் படிங்க: போராட்டத்தில் இறங்கும் ஜாக்டோ-ஜியோ; தமிழக அரசுக்கு சிக்கல்!