தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பூட்டிய வீட்டில் மிளகாய்ப் பொடி தூவி பணம், நகை கொள்ளை - பூட்டிய வீட்டில் திருட்டு

திருநெல்வேலி: பூட்டிக் கிடந்த வீட்டில், 1.50 லட்சம் ரூபாய், 10 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

கொள்ளை
கொள்ளை

By

Published : Sep 22, 2020, 10:54 AM IST

திருநெல்வேலி மாவட்டம், சுத்தமல்லி அருகே சத்யாநகர் 1ஆவது தெருவைச் சேர்ந்தவர் செல்லப்பா. இவரது மனைவி லதா. இந்த தம்பதிக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர்.

இந்த நிலையில், செல்லப்பாவுக்கு உடல்நிலை சரியில்லாததால் அவரை கடந்த 13 நாட்களுக்கு முன்பு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர்.

அதனால் லதா வீட்டை பூட்டிவிட்டு தனது இரண்டு குழந்தைகளுடன் செல்லப்பாவுக்கு துணையாக மருத்துவமனையில் தங்கியுள்ளார்.

இதனையடுத்து சில பொருட்களை எடுப்பதற்காக லதா நேற்று (செப்டம்பர் 21) தனது வீட்டிற்கு வந்தபோது கதவு திறந்து கிடப்பதைக் கண்டு பதற்றமுடன் உள்ளே சென்று பார்த்துள்ளார்.

அப்போது பீரோவில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்ததுடன் பீரோவில் சிறுகச் சிறுக சேமித்து வைத்திருந்த 1.50 லட்சம் ரூபாய், 10 சவரன் நகைகள் கொள்ளை போனதை அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்த சுத்தமல்லி காவல் நிலைய ஆய்வாளர் சித்ரா குமாரி, திருநெல்வேலி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பிரதீப்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு நடத்தினர்.

பின்னர் கொள்ளை சம்பவம் குறித்தும் வீட்டில் வேறு ஏதும் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டதா என்பது குறித்தும் லதாவிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். இதுகுறித்து லதா அளித்தப்புகாரின் பேரில் சுத்தமல்லி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களைத் தேடி வருகின்றனர்.

கடைசியாக கடந்த வியாழக்கிழமை (செப்டம்பர் 17) லதா தனது வீட்டிற்கு வந்து பணம், நகைகள் இருக்கிறதா என்பதைப் பார்த்து விட்டுச் சென்றுள்ளார். எனவே, ஓரிரு நாட்களுக்கு முன்புதான் இந்த கொள்ளை சம்பவம் நடைபெற்றிருக்கலாம் என்பதால் காவல் துறையினர் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

காவல் துறையினரிடம் மாட்டிக் கொள்ளாமல் இருக்க கொள்ளையர் வீட்டின் முன்பு மிளகாய்ப் பொடியை தூவி விட்டுச் சென்றுள்ளார். பூட்டிய வீட்டில் கொள்ளைபோன சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details