தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஜனவரி 29ஆம் தேதி பறவைகள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி ஜனவரி 29ஆம் தேதி தொடங்குகிறது.

பறவைகள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்
பறவைகள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்

By

Published : Jan 22, 2021, 12:07 PM IST

திருநெல்வேலி மாவட்ட அகத்தியமலை மக்கள் சார் இயற்கைவள காப்பு மையம், இயற்கை சங்கம், முத்துநகர் இயற்கை சங்கம் ஆகியவை இணைந்து கடந்த 10 ஆண்டுகளாக குளங்களில் பறவைகள் கணக்கெடுக்கும் பணியை நடத்தி வருகின்றனர்.

தாமிரபரணி பாசன அமைப்பு மூலம் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மூன்று மாவட்டங்களில் உள்ள ஏராளமான குளங்கள் நீராதாரம் வளம் பெறுகிறது. ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழை காலகட்டத்தில் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டு குளங்கள் நிரம்பும்.

அப்போது வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பறவைகள் இரை தேடி குளங்களை நோக்கி படையெடுக்கும். அப்படி வரும் பறவைகளை மேற்கண்ட அமைப்பைச் சேர்ந்த தன்னார்வலர்கள் கணக்கெடுப்பு நடத்துகின்றனர்.

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான பறவைகள் கணக்கெடுக்கும் பணி ஜனவரி 29ஆம் தேதி முதல் 31ஆம் தேதிவரை நடைபெறவுள்ளது. இந்த பணியில் கலந்துகொள்ள விருப்பமுள்ள தன்னார்வலர்கள் 99947 66473 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தங்களின் பெயரை பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பின்னர் அவர்களுக்கு வரும் 29ஆம் தேதி முன்னீர் பள்ளத்தில் உள்ள பள்ளியில் வைத்து பயிற்சி அளிக்கப்படுகிறது. அதன் பிறகு அனைவரும் வெவ்வேறு குளங்களுக்கு பிரித்து அனுப்பப்பட்டு பறவைகள் கணக்கெடுப்பு பணியை மேற்கொள்ள உள்ளனர்.

இந்த ஆண்டு தென்மாவட்டங்களில் காலம் தவறி பெய்த மழையால் பறவைகளின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளதாக இயற்கை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க: 'வாருங்கள் பறவைகளை ஆவணப்படுத்துவோம்' - மதுரை பறவை ஆர்வலர்களின் முயற்சி

ABOUT THE AUTHOR

...view details