திருநெல்வேலி:பாளையங்கோட்டை அடுத்த என்ஜிஓபி காலனி பகுதியைச் சேர்ந்தவர், அருள் விசுவாசம் (48).
இவர் கடந்த ஜூன் 22ஆம் தேதி உடல் முழுவதும் அடிபட்ட நிலையில் ரத்தக்காயங்களுடன் வீட்டிற்கு வந்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது மனைவி மேரி உடனடியாக அருள் விசுவாசத்தை பாளையங்கோட்டை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார்.
அங்கு தீவிர சிகிச்சையிலிருந்த அவர் நேற்றிரவு (ஜூன் 23) சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில், அருள் விசுவாசத்தை அவரது நண்பர்களே கூட்டு சேர்ந்து அடித்துக் கொலை செய்ததாக அவரது மனைவிக்குத் தெரியவரவே, இதுகுறித்து பெருமாள்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அருள் விசுவாசத்தின் நண்பர்களான மரிய சிலுவை, இயேசு பால், மணிகண்டன் ஆகியோர் சேர்ந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்ததாகத் தெரிகிறது. இதில், மணிகண்டன் பழவூர் காவல் நிலையத்தில் முதல் நிலைக் காவலராகப் பணிபுரிந்து வருகிறார்.