தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நெல்லை மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கில் தீ விபத்து! - thoothukudi fire accident

நெல்லை: ராமையன்பட்டியில் மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தால் கிளம்பிய புகை மூட்டத்தில் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.

thoothukudi-fire-erupted-in-garbage-dump
thoothukudi-fire-erupted-in-garbage-dump

By

Published : Sep 29, 2020, 11:08 AM IST

நெல்லை மாவட்டம் ராமையன்பட்டியில் மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு அமைக்கப்பட்டுள்ளது. 125 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த குப்பைக் கிடங்கில்தான் நெல்லை மாநகராட்சியின் 55 வார்டுகளில் இருந்து பெறப்படுகிற குப்பைகள் அனைத்தும் கொட்டப்பட்டு வருகின்றது.

கொட்டி வைக்கப்பட்டுள்ள குப்பைகள் மக்கும் குப்பையாகவும், மக்கா குப்பையாகவும் பிரித்து சேமிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் ஜூன், ஜூலை மாதங்களில் தென்மேற்கு பருவகாற்று வீசுவதால் இங்கு தேங்கி கிடக்கும் குப்பைகளில தீ விபத்து ஏற்படுவதும், அதனால் ராமையன்பட்டி தொடங்கி சுற்றுவட்டார பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் புகை மூட்டம் சூழ்ந்து மூச்சுதிணறல் ஏற்படுவதும் வாடிக்கையாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் நேற்று குப்பை கிடங்கில் திடீரென தீ பற்றி எரிந்து வருகிறது. தகவலறிந்து பாளையங்கோட்டை தீயணைப்பு நிலையத்தில் இருந்து மூன்று வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தால் சுமார் இரண்டு கிலோ மீட்டர் சுற்றளவில் புகை மூட்டம் ஏற்பட்டது. தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் புகை மூட்டத்தின் மத்தியில் கடுமையாக போராடி தீயை அணையத்தனர். இது அப்பகுதி பொதுமக்கள் இடையே பெரிதும் நிம்மதியை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க:ஐசிஎஃப் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து!

ABOUT THE AUTHOR

...view details