திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோயிலில் முக்கிய திருவிழாக்களில் ஆடிப்பூர திருவிழாவும் ஒன்று.
அதேபோல் கோயிலின் முக்கிய விழாவான தேர் திருவிழா கடந்த 14ஆம் தேதி நடைபெற்றுமுடிந்தது.
இந்நிலையில் ஆடிப்பூர திருவிழா இன்று காலை அம்மன் சன்னதியில் உள்ள கொடி மரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
நெல்லையப்பர் கோவிலில் இன்று கொடியேற்ற வைபவம்! அதனைத் தொடர்ந்து வரும் 28ஆம் தேதி காந்திமதி அம்மனுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அன்று நெல்லை மாவட்டம் முழுவதும் ஏராளமான பெண்கள் அம்பாளுக்கு வளையல் அணிவித்து அம்மன் அருள் பெறுவர்.
அதன் மூலம் குழந்தை இல்லாத தம்பதியருக்கு குழந்தை பிறக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இன்று நடைபெற்ற கொடியேற்ற நிகழச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.