தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நெல்லையில் 11 நாள்களுக்குப் பிறகு மீண்டும் கரோனா - அலுவலர்களுடன் ஆட்சியர் ஆலோசனை - pregnant test positive for covid19 district confirms case after 11 days

திருநெல்வேலி : நெல்லையில் 11 நாள்களுக்குப் பிறகு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள சூழலில், மாவட்ட ஆட்சியர் தலைமையில் நேற்று (மே 5) அவசர ஆலோனைக் கூட்டம் நடைபெற்றது.

thirunelveli
thirunelveli

By

Published : May 6, 2020, 7:36 AM IST

நெல்லை மாவட்டத்தில் கடந்த 11 நாள்களாக கரோனா தொற்று கண்டறியப்படாத நிலையில், மாவட்டம் ஆரஞ்சு மண்டலமாக அறிவிக்கப்பட்டது. இதனிடையே, மாவட்டத்தில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 9லிருந்து 4ஆகக் குறைக்கப்பட்டன. மத்திய மாநில அரசுகள் அறிவித்த தளர்வுகள் படி மாவட்டம் நேற்று சகஜ நிலைக்குத் திரும்பியது.

இந்நிலையில், நேற்று நெல்லை மாநகரப் பகுதியில் உள்ள 24 வயது கர்ப்பிணிக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார். பெண்ணின் உறவினர்கள், நண்பர்கள் எனப் பலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதையடுத்து, கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர், உயர் அலுவலர்களுடன் அவசர ஆலோனை மேற்கொண்டார்.

இந்த கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், சுகாதார இணை இயக்குநர் மாநகர காவல்துறை அலுவலர்கள், உள்ளிட்ட உயர் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க : லேசான கரோனா அறிகுறியா? - வீட்டிலேயே தனிமைப்படுத்த அரசு உத்தரவு!

ABOUT THE AUTHOR

...view details