தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தின் போது பணியில் இருந்த காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம் - அருணா ஜெகதீசனின் விசாரணை அறிக்கை

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நடந்தபோது காவல் ஆய்வாளராக இருந்த திருமலை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

thirumalai has dismissed who was on duty at Tuticorin firing incident
thirumalai has dismissed who was on duty at Tuticorin firing incident

By

Published : Oct 21, 2022, 11:24 AM IST

Updated : Oct 21, 2022, 11:40 AM IST

திருநெல்வேலி: தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தின் போது பணியில் இருந்த காவல் ஆய்வாளர் திருமலை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இவர் திருநெல்வேலி மாநகர சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு உதவி ஆணையராக பதவி உயர்வு பெற்று பணியாற்றி வந்தவர். தூத்துக்குடி துப்பக்கி சூடு சம்பவம் குறித்த அருணா ஜெகதீசனின் விசாரணை அறிக்கை தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.

அதில், துப்பக்கி சூடு சம்பவத்தின்போது போலீசார் வரம்புகளை மீறி செயல்பட்டுள்ளனர். ஆகவே அப்போதைய தென்மண்டல ஐ.ஜி சைலேஷ் குமார் யாதவ், டிஐஜி கபில்குமார் சரத்கர், எஸ்.பி மகேந்திரன், துணை எஸ்.பி லிங்கத் திருமாறன், ஆய்வாளர்கள் திருமலை, ஹரிஹரன் பார்த்திபன் உள்ளிட்ட 17 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. அதனடிப்படையில், அப்போதைய காவல் ஆய்வாளர் திருமலை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க:தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு; எடப்பாடி மீது குற்ற வழக்குப் பதிவு செய்ய வேண்டும் - தமிழக அரசுக்கு எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை

Last Updated : Oct 21, 2022, 11:40 AM IST

ABOUT THE AUTHOR

...view details