திருநெல்வேலி: திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பான வழக்குகள், திருநெல்வேலி அரசு விருந்தினர் மாளிகையில் விசாரிக்கப்பட்டு வந்தன.
கரோனா நோய் பரவலின் காரணமாக தமிழ்நாடு அரசு ஊரடங்கை அமல்படுத்தியதால், கடந்த பிப்ரவரி மாதம் முதல் மனித உரிமை ஆணைய விசாரணை அமர்வு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நோய் பரவல் எண்ணிக்கை குறையத் தொடங்கியதையடுத்து, ஊரடங்கு விதிமுறைகளில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.
இதனையடுத்து தமிழ்நாடு மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினர் நீதிபதி துரை ஜெயச்சந்திரன் தலைமையிலான விசாரணை அமர்வு, ஜூலை 15, 16 ஆகிய தேதிகளில் வழக்குகளை விசாரிக்கும் என அறிவிக்கப்பட்டது.
ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நான்கு மாதங்களுக்குப் பின்னர் நடைபெற்ற இரண்டு நாள் விசாரணை அமர்வில், 81 வழக்குகள் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி விசாரிக்கப்பட்டன. மனுதாரர்களும், வழக்கறிஞர்களும் முகக்கவசம் அணிந்து விசாரணையில் பங்கேற்றனர்.
விசாரணை அரங்கு ஒருமணி நேரத்திற்கு ஒருமுறை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:பொருளாதார குற்றப்பிரிவு வழக்கு: 8 பேர் கைது உத்தரவில் இடைக்காலத் தடை நீட்டிப்பு!