திருநெல்வேலி: இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட புனித நாட்களை நினைவு கூரும் வகையில், உலகெங்கும் உள்ள கிறிஸ்தவர்கள் 40 நாட்கள் தவக்கால நோன்பு மேற்கொண்டு சிறப்பு வழிபாடுகளை நடத்துவார்கள். அதன் ஆரம்பமாக சாம்பல் புதனுடன் இன்று கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடங்கியது.
இதனையொட்டி நெல்லை பாளையங்கோட்டை தூய சவேரியார் பேராலயத்தில் சிறப்பு ஆராதனை நடைபெற்றது. இதில் பாளையங்கோட்டை மறை மாவட்ட ஆயர் அந்தோணி சாமி கலந்து கொண்டு பங்கு இறை மக்களின் நெற்றியில் சாம்பலை பூசி தவக்காலத்தை தொடங்கி வைத்தார். இந்த தவக்காலத்தின் முக்கிய நிகழ்வான வருகிற ஏப்ரல் மாதம் ஏழாம் தேதி இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட துக்க தினமான புனித வெள்ளி அனுசரிக்கப்படுகிறது.