நெல்லை: இந்து பெண்கள், தாய்மார்களை இழிவாகப் பேசியதாகக்கூறி திமுக அரசின் துணைப் பொதுச்செயலாளரும், நீலகிரி தொகுதி எம்.பி.யுமான ஆ. ராசாவைக் கண்டித்து நெல்லையில் இந்து மக்கள் கட்சி சார்பில் மாவட்டத்தலைவர் மாரியப்பன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆ.ராசா உருவபொம்மையினை எரிக்க முயற்சி - நெல்லையில் பரபரப்பு!
இந்து தாய்மார்களை இழிவாகப் பேசியதாகக்கூறி, இந்து மக்கள் கட்சியினர் நெல்லை ரயில் நிலையம் முன்பு ஆ.ராசாவைக் கண்டித்தும், அவரை கைது செய்ய வலியுறுத்துகின்றனர்.
அப்போது காரில் ஆ. ராசாவின் உருவப்பொம்மையை மறைத்து வைத்திருந்ததை அறிந்த காவல்துறையினர் உருவப் பொம்மையை பறித்தனர். அப்போது இந்து மக்கள் கட்சியினருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் சற்று நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து இந்து மக்கள் கட்சியினர் நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் முன்பு ஆ. ராசாவை கண்டித்தும், அவரை கைது செய்ய வலியுறுத்தியும் கண்டன முழக்கங்கள் எழுப்பினார்கள்.
இதையும் படிங்க:பெட்ரோல் வெடிகுண்டு:தங்களுக்கு தாங்களே விளம்பரத்திற்காக வீசியிருப்பின் கடும் நடவடிக்கை - தென் மண்டல ஐஜி எச்சரிக்கை