இது தொடர்பாக திருநெல்வேலியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறுகையில், ஐந்தாண்டுகளாக மோடி அரசை ப. சிதம்பரம் கடுமையாக விமர்சித்தார். அதுமட்டுமல்லாமல் பொருளாதார பின்னடைவை குறித்து கட்டுரை மூலம் அம்பலப்படுத்தியவர். இதை மனதில் வைத்துக் கொண்டு பழிவாங்கும் நோக்கத்தில் முகாந்திரம் இல்லாத வழக்கில் மோடி அரசு அவரை கைது செய்துள்ளது.
மோடி அரசை கடுமையாக விமர்சித்ததன் விளைவுதான் கைது நடவடிக்கை - திருமாவளவன் - கைது நடவடிக்கை
நெல்லை: ஐந்தாண்டுகளாக மோடி அரசை கடுமையாக விமர்சித்தவர் ப.சிதம்பரம் எனவும், அவரை அவமானபடுத்தும் நோக்கில் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.
ஆனால் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டு வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றவர்களை கைது செய்து இந்தியா கொண்டுவர மோடி அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. ப. சிதம்பரத்தை அவமானப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. சிதம்பரத்தின் கைது இந்திய ஜனநாயகத்தில் நடக்காத ஒரு அநாகரிகம் ஆகும். காஷ்மீர் விவகாரத்தில் வெளிப்படையான ஆதரவை அதிமுக தெரிவித்து வருகிறது. மோடி அரசுக்கு ஆதரவு தெரிவிக்கவேண்டும் என்ற நோக்கத்தில் திமுக மீது காஷ்மீர் விவகாரத்தில் குற்றச்சாட்டை வைக்கின்றார்கள், என்றார்.