தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

‘ஸ்டாலின் தலைமையில் புதிய ஆட்சி’ - கனிமொழி - புதிய ஆட்சி

திருநெல்வேலி: தமிழ்நாட்டில் ஸ்டாலின் தலைமையில் விரைவில் புதிய ஆட்சி உருவாகும் என்று கனிமொழி தெரிவித்துள்ளார்.

kanimozhi

By

Published : Sep 8, 2019, 11:34 PM IST

திருநெல்வேலி மாவட்டம் தென்காசி அருகே உள்ள குத்துக்கல்வலசையில் மக்களவை உறுப்பினர் கனிமொழி நீர்த்தேக்கத் தொட்டியை திறந்து வைத்தார். இதில் திமுக மாவட்ட நிர்வாகிகள், மாவட்ட செயலாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அப்போது, கனிமொழி எம்பி பேசுகையில, ‘ஸ்டாலின் தலைமையில் விரைவில் புதிய ஆட்சி உருவாகும். இப்பொழுது நடந்து வருகின்ற ஆட்சி பாஜக ஆட்சி போல் செயல்படுகிறது. இதற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும்’ என்று தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details