நெல்லை:திருநெல்வேலி மாநகரத்தை சேர்ந்தவர் இளம்பெண். இவர் தன்னை ஏர்வாடியைச் சேர்ந்த சாமுவேல்(மதபோதகர்) என்பவர் திருமணம் செய்வதாக கூறிவிட்டு ஏமாற்றியதாகவும், பல பெண்களை சீரழித்து வருவதாகவும் திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் மனு ஒன்றை இன்று (ஜன.20) அளித்துள்ளார்.
அந்த மனுவில் அவர், "சாமுவேலும் நானும் பத்து ஆண்டுகளாக நட்பாகப் பழகி வந்தோம் என்னோடு அவர் தனிமையில் இருந்துள்ளார். கணவன் மனைவி போல் வாழ்ந்தோம், திருமணம் செய்துகொள்வதாக உறுதி அளித்தார். ஆனால், எனக்கே தெரியாமல் சென்னையைச் சேர்ந்த மற்றொரு பெண்ணை திருமணம் செய்துள்ளார். இதைக்கேட்டால், என்னை மிரட்டுகிறார். பலமுறை என்னை ஆபாசமாக செல்போனில் படம் பிடித்து வைத்துள்ளார்.
எனது விருப்பத்திற்கு மாறாக பாலியல் சித்திரவதை கொடுத்திருக்கிறார். என்னைத் திருமணம் செய்து கொள்வதாக இரண்டு லட்சம் ரூபாய் என்னிடம் பணம் வாங்கியுள்ளார். இதைக்கேட்டால், அவரது மாமா உடன் சேர்ந்து கொண்டு கொலை மிரட்டல் விடுத்ததோடு, ஒருமையில் பேசி அவமானப்படுத்தியுள்ளார்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.