தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'பாண்டிச்சேரி முதல்வருக்கும் எனக்குமான சண்டை அண்ணன் தங்கை சண்டை போன்றது' - is like a brother and sister fight

பாண்டிச்சேரி முதலமைச்சர் என்.ரங்கசாமிக்கும் தனக்கும் இடையே எவ்வித மோதலும் இல்லையெனவும், அண்ணனுக்கும் தங்கைக்குமான பிரச்னை தான் இருவருக்குமிடையே உள்ளதெனவும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Jun 28, 2023, 10:21 PM IST

Updated : Jun 28, 2023, 10:48 PM IST

'பாண்டிச்சேரி முதல்வருக்கும் எனக்குமான சண்டை அண்ணன் தங்கை சண்டை போன்றது' - தெலங்கானா ஆளுநர் தமிழிசை

திருநெல்வேலி:பாண்டிச்சேரி முதலமைச்சர் என்.ரங்கசாமிக்கும் தனக்கும் இடையே அண்ணனுக்கும் தங்கைக்குமான பிரச்னை தான் உள்ளதென ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். மேலும், சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபை விவகாரத்தில் (Chidambaram Nataraja Temple Kanakasabha issue) அரசும் தீட்சிதர்களும் சுமூகமாக பேசி முடிவெடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

நெல்லையப்பர் திருக்கோயில் ஆனித் திருவிழாவின் ஐந்தாம் நாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு இன்று (ஜூன் 28) கோயில் நிர்வாகம் சார்பில் பூர்ணகும்ப மரியாதை வழங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து காந்திமதி அம்பாள் சந்நிதி, சுவாமி நெல்லையப்பர் சந்நிதி உள்ளிட்ட அனைத்து சந்நிதிகளிலும் அவர் சுவாமி தரிசனம் செய்தார்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மக்களோடு கூட்டமாக கோயில்களில் சுவாமி தரிசனம் செய்ய வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும், கரோனா பேரிடரை மக்களிடம் இருந்து அகற்றப்படுவதற்குப் பெரும் ஆயுதமாக இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட தடுப்பூசி மிகவும் உதவிகரமாக இருந்ததாகவும் தெரிவித்தார்.

அண்ணன் - தங்கைக்கு இடையேயான பிரச்னை: தொடர்ந்து பேசிய அவர், ''பாண்டிச்சேரி முதலமைச்சருக்கும், ஆளுநருக்கும் இடையே மோதல் எதுவும் இல்லை. எங்கள் இருவருக்குமான பிரச்னை அண்ணன் தங்கை பிரச்னை தான்'' என்றும் விளக்கினார்.

பாண்டிச்சேரிக்கு கடந்த ஆண்டுகளை விட ரூ.2000 கோடி கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், 13 ஆண்டுகளுக்குப் பிறகு பாண்டிச்சேரியில் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார். மேலும், 65,000 பெண்களுக்கு பாண்டிச்சேரி மாநிலத்தில் மாதம் ரூ.1000 வழங்கப்பட்டு வரும் நிலையில், இந்தத் திட்டம் தமிழகத்தில் வெறும் அறிவிப்பாகவே உள்ளதாகவும் விமர்சித்தார்.

பெஸ்ட் புதுச்சேரி:செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்ய முடியவில்லையே என்ற ஆதங்கத்தில் முதலமைச்சர் பேசியிருக்கலாம் என்றும்; நீதிமன்றத்தில் பணி நியமான ஆணை தொடர்பாக தடை ஆணைகளும் வழிகாட்டுதல்களும் உள்ள காரணத்தினால் செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய முடியாத சூழல் இருந்து வருவதாகவும் கூறினார். இதே பிரச்னை தான், தமிழகத்திலும் இருப்பதாகவும், அதிகாரிகள் மெத்தனமாக செயல்படுவதாக அமைச்சர்கள் தெரிவிப்பதாகவும் குற்றம்சாட்டினார். இந்த நிலையில், அதிகாரிகளை விரைவாக பணி செய்ய அறிவுரை வழங்கப்பட்டு வருவதாகவும், முன்னதாக பாரத பிரதமர் மோடி 'பெஸ்ட் புதுச்சேரி' என சொல்லியதாகப் பேசினார்.

அரசும் தீட்சிதர்களும் சுமூக முடிவெடுக்கவும்:இந்த நிலையில், நான் அதை 'ஃபாஸ்ட் புதுச்சேரி'-யாக மாற்ற முயற்சி எடுத்து வருகிறேன் என்றார். ''சிதம்பரம் நடராஜர் கோயிலில் (Chidambaram Natarajar Temple) நான் பக்தையாக சென்று சுவாமி தரிசனம் செய்யும்போது கூட பூஜைகள் நடக்கிறது என்று சொல்லி சுவாமி தரிசனம் செய்வதில் சில பிரச்னைகள் இருந்தது. இதற்கு அரசும் தீட்சிதர்களும் அமர்ந்து பேசி இந்தப் பிரச்னையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். நடராஜர் அனைவருக்கும் பொதுவானவர். அனைவரும் சுவாமி தரிசனம் செய்வதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றும் கூறியுள்ளார்.

குலசேகரபட்டினத்தில் அமைய உள்ள ராக்கெட்டை ஏவுதளத்தின் (kulasekarapattinam spaceport) மூலம் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் நபர்கள் வரை வேலைவாய்ப்பு பெறும் வாய்ப்பு கிடைத்துள்ளதாகக் கூறினார். 'தூத்துக்குடி பாராளுமன்ற வேட்பாளராக தான் போட்டியிட்டபோது தூத்துக்குடிக்கு புல்லட் ரயில் கொண்டு வருவேன் என அறிவித்தபோது பலரும் அதனை கேலிகிண்டல் செய்தனர். தற்போது ஒரே நாளில் ஐந்து வந்தே பாரத் ரயில்கள் (Vande Bharat Trains) இயக்கப்பட்டுள்ளது. தென் தமிழகத்தில் இருந்தும் வந்தே வாரத்தில் ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் தொடர்ந்து வைக்கப்பட்டு வருகிறது’ என ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.

2025-ல் இந்திய பொருளாதாரம் வளரும்:பிரதமர் நரேந்திர மோடி ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என அறிவித்திருந்த நிலையில், இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத வகையில் 86,000 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் பெருமிதம் கூறினார். இதன் மூலம் பல இளைஞர்களுக்கு வேலைகொடுக்கும் இடத்திற்குச் சென்றுள்ளதோடு, இந்தியப் பொருளாதாரம் ஐந்து ட்ரில்லியன் டாலருக்கு வருகிற 2025-ல் உயரும் என உலக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

மற்ற நாடுகளை இந்தியா சார்ந்து இருந்த நிலை மாறி இந்தியாவை மற்ற நாடுகள் சார்ந்திருக்கும் நிலை உருவாகி வருவதாகவும் அவர் மேலும் நாட்டின் வளர்ச்சி குறித்து நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: பொது சிவில் சட்டத்திற்கு ஆம் ஆத்மி ஆதரவு! ஒருமித்த கருத்தை உருவாக்க அறிவுறுத்தல்!

Last Updated : Jun 28, 2023, 10:48 PM IST

ABOUT THE AUTHOR

...view details