நாகர்கோவிலைச் சேர்ந்த கிறிஸ்டோபர் என்பவர் கூடன்குளம் அணுமின் நிலைய தீயணைப்பு வீரராக பணியாற்றிவருகிறார். இவர் மீது வள்ளியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த மூன்று வாரங்கள் முன்பு போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து இவரை கைது செய்ய காவல் துறையினர் தேடிவந்தனர்.
காவல் விசாரணைக்காக அழைத்துவரப்பட்ட பெண் சந்தேக மரணம்! - death at police station
நெல்லை: விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துவரப்பட்ட பெண் ஒருவர் சந்தேகமான முறையில் உயிரிழந்துள்ள சமபவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், கிறிஸ்டோபர் கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் கப்பிவிளையைச் சேர்ந்த இஸ்ரவேல் மனைவி லீலாபாய் (45) என்பவருடன் தொலைபேசியில் பேசிவந்துள்ளார். இதனை அறிந்த வள்ளியூர் காவலர்கள் நேற்று முன்தினம் வள்ளியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு லீலாபாயை விசாரணைக்காக அழைத்து வந்தனர்.
காவல் நிலையத்திற்கு வந்த லீலாபாய் நேற்று இரவு சந்தேகமான முறையில் இறந்துள்ளார். அவரது உடல் உடற்கூறாய்விற்காக நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. காவல் விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட பெண் உயிரிழந்ததால் அப்பகுதியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.