தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சுத்தமல்லி காவல் நிலையத்துக்கு தமிழ்நாடு அரசின் விருது! - ஏமாற்றம்

சுத்தமல்லி காவல் நிலையத்துக்கு 2019ஆம் ஆண்டுக்கான சிறந்த காவல் நிலைய பரிசு வழங்கப்பட்டது.

police
police

By

Published : Sep 2, 2021, 6:21 AM IST

திருநெல்வேலி: தமிழ்நாடு முதலமைச்சரின் மாவட்ட மற்றும் மாநகர அளவிலான சிறந்த காவல் நிலையத்திற்கான பரிசு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது 2019ஆம் வருடத்திற்கான பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், திருநெல்வேலி மாவட்டத்தில் 2019ஆம் ஆண்டிற்கான சிறந்த காவல் நிலையத்திற்கான பரிசு சுத்தமல்லி காவல் நிலையத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

இப்பரிசினை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன், சேரன்மகாதேவி உள்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பார்த்திபன் ஆகியோர் சுத்தமல்லி காவல் ஆய்வாளர் ஜீன்குமாரிடம் வழங்கினர். இவ்விருது வழங்கும் விழா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.

சிறப்பாக விசாரணை மேற்கொண்டு கொலை குற்றவாளிகளை விரைந்து கைது செய்ததற்கும், போதைப் பொருட்கள் விற்பனை செய்வதை விரைந்து தடுத்து நடவடிக்கை எடுத்ததற்கும், காவல் நிலையத்திலுள்ள ஆவணங்கள் மற்றும் பதிவேடுகள் முறையான வகையில் பின்பற்றியதற்காகவும், காவல் நிலையத்தின் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருந்தற்கும் இப்பரிசு சுத்தமல்லி காவல்நிலையத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details