தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிலம்பாட்டம் ஆடி மாணவர்கள் கரோனா விழிப்புணர்வு - திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம்

திருநெல்வேலி: அம்பாசமுத்திரம் பகுதியில் மாணவர்கள் கரோனா கிருமி போல வேடம் அணிந்து சிலம்பாட்டம், இசைக்கருவிகளை இசைத்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

Corona awarness ambai
Corona awarness ambai

By

Published : Apr 21, 2020, 11:09 AM IST

கரோனா தொற்று பரவலை கட்டுபடுத்தும் வகையில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்களிடையே மத்திய, மாநில அரசுகள் கரோனா தொற்று குறித்து பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கிவருகின்றன. அதே நேரத்தில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றுபவர்கள் மீது காவல் துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

சிலம்பாட்டம் ஆடி மாணவர்கள் கரோனா விழிப்புணர்வு

இந்த நிலையில் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே முக்கூடல் பகுதியில் காவல் துறையினர், தாமிரபரணி பாதுகாப்பு சங்கம், மாணவர்கள் சங்கம் சார்பில் கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் உத்தரவை மீறி வெளியே வரும் மக்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாக மேளம் இசைக்கப்பட்டு, கரோனா கிருமி போல வேடம் அணிந்த ஒருவர் பாரம்பரிய கலையான சிலம்பம் விளையாடி சுற்றிவருவதுபோல நடித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

மேலும் அரசு உத்தரவை மதித்து பொதுமக்கள் வெளியே வரக்கூடாது எனவும் வெளியே வந்தால் நோய் தொற்றினால் அவதிக்கு உள்ளாக வேண்டும் எனவும் காவல் துறையினர் ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

இதையும் படிங்க: 450 டன் மருத்துவ உபகரணங்களை சுமந்த இந்திய விமானப்படை

ABOUT THE AUTHOR

...view details