நெல்லை மாவட்டம் அழகிய பாண்டியபுரத்தைச் சேர்ந்த மாணவன் சுரேந்தர்(18), தாயார், சகோதரியுடன் மகாராஜநகர் ஹவுசிங் போர்டு பகுதியில் வசித்து வந்தார். இவரது தாயார் பாளை என்பவர் சித்த மருத்துவமனையில் ஊழியராகப் பணியாற்றி வருகிறார்.
பத்தாம் வகுப்பு தேர்வில் தோல்வி: மாணவன் தூக்கிட்டு தற்கொலை! - suicide
திருநெல்வேலி: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வியடைந்த விரக்தியில் மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் திங்களன்று வெளியானது. இதில் தனியார் டுட்டோரியல் ஒன்றில் படித்து வந்த மாணவன் சுரேந்தர் இந்த முறை தோல்வியடைந்ததால் விரக்தி அடைந்து திங்களன்று இரவில் தனது நண்பர் ஒருவரின் பைக்கை வாங்கிக்கொண்டு நெல்லை சேந்திமங்கலம் ஆற்றங்கரை அருகே உள்ள சுடுகாட்டில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனையடுத்து, காலையில் அங்குள்ள மக்கள் ஆற்றுக்கு குளிக்கச் சென்றபோது மரத்தில் ஒரு உருவம் தூக்கில் தொங்குவதைப் பார்த்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தச்சநல்லூர் காவல் துறையினர், மாணவரின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக பாளை ஹைகிரவுண்ட் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.