திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் நேற்று (பிப்.06) நெல்லை மாவட்டத்தில் உள்ள கோயில் ஒன்றில் சாமி கும்பிட சென்றுள்ளார். அப்போது துர்கா ஸ்டாலினிடம் நாங்குநேரியைச் சேர்ந்த பட்டு (85) என்ற மூதாட்டி ஒருவர் ஸ்டாலினுக்கு பெருமாள் மீது நம்பிக்கை உண்டா என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த துர்கா ஸ்டாலின், “அவர் (ஸ்டாலின்) கோயிலுக்கு வருவார், பெருமாள் மீது நம்பிக்கை உண்டு” என பதிலளித்தார்.