தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாமியாரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த மருமகன் கைது - மாமியாரை வெட்டிக் கொலை செய்த மருமகன் கைது

நாங்குநேரி அருகே மாமியாரை வெட்டிக் கொலை செய்த மருமகனை காவல் துறையினர் கைது செய்தனர்.

மாமியாரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த மருமகன் கைது
மாமியாரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த மருமகன் கைது

By

Published : Jul 18, 2021, 10:46 AM IST

Updated : Jul 18, 2021, 11:54 AM IST

திருநெல்வேலி: நாங்குநேரி அடுத்த மூலைக்கரைப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் வேலாயுதம். இவரது மனைவி ராஜலட்சுமி.

இவர்களது மகள் அனிதாவுக்கும் அபிமன்யு என்பருக்கும் சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், அனிதா வேறு ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவு இருந்ததாக அபிமன்யூ சந்தேகம் அடைந்தார். இதுதொடர்பாக கணவன்,மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால்,கோபம் அடைந்த அனிதா தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இருப்பினும் மனைவியை பிரிந்து வாழ விரும்பாத அபிமன்யு, அனிதாவை வீட்டிற்கு அழைத்து செல்வதற்காக நேற்றிரவு (ஜூலை 17) மூலைக்கரைப்பட்டியிலுள்ள மாமியார் ராஜலட்சுமி வீட்டிற்குச் சென்றுள்ளார்.

மாமியாரை வெட்டிய மருமகன்

அப்போது, அனிதாவை அனுப்பி வைக்காமல் அபிமன்யுவை தகாத வார்த்தைகளால் ராஜலட்சுமி திட்டியதாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த அபிமன்யு, வீட்டிலிருந்த அரிவாளை எடுத்து மாமியார் ராஜலட்சுமியை சரமாரியாக வெட்டி கொலை செய்தார்.

இதனைத் தடுக்க முயன்ற பக்கத்து வீட்டைசேர்ந்த அன்பழகன் என்பவருக்கும் வெட்டு விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மாமனாரும், மருமகனும் கைது

அபிமன்யுவின் மாமியார் ராஜலட்சுமியும் வேறு ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவு இருந்ததாகவும், இதனால் அபிமன்யுவுடன் சேர்ந்து ராஜலட்சுமியின் கணவர் வேலாயுதமும் அவரை அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து அங்கு இடத்திற்கு சென்ற மூலைக்கரைப்பட்டி காவல் துறையினர், உயிரிழந்த ராஜலட்சுமியின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அபிமன்யு, ராஜலட்சுமியின் கணவர் வேலாயுதம் ஆகிய இருவரையும் காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: கடன் கொடுக்கல் வாங்கல் விவகாரம்: 3 பேருக்கு அரிவாள் வெட்டு

Last Updated : Jul 18, 2021, 11:54 AM IST

ABOUT THE AUTHOR

...view details