தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தாமிரபரணியின் அவலநிலைக்கு தீர்வு காணப்படுமா?

திருநெல்வேலி: "அமலை செடிகள் மற்றும் குப்பைகளால் ஆக்கிரமிக்கப்பட்டு அழகு இழந்து வரும் தாமிரபரணி ஆற்றினா தூர்வாரி மீட்க வேண்டும்" என்று, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை எழுப்பியுள்ளனர்.

tirunelveli

By

Published : Jun 3, 2019, 5:08 PM IST

தமிழ்நாடு முழுவதும் கோடைக் கால வெயிலானது மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இதனால் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. குறிப்பாக திருநெல்வேலி மாவட்டத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்கிய பிறகு 100 டிகிரிக்கு குறையாமல் வெயில் அடித்து வருகிறது. இதனால், பிரதான அணைகள் அனைத்திலும் நீர்மட்டம் மிகவும் மோசமான நிலைக்கு சென்று விட்டது.

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வற்றாத ஜீவ நதியான தாமிரபரணி நதியில் நீரோட்டம் மிகவும் குறைந்து தரைமட்டத்தில் காணப்படும் அவலம் ஏற்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் போராடும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மிக அருகில் உள்ள முருகன் கோவில் என்ற பகுதியில் தாமிரபரணி நதியானது நதியே தெரியாத அளவிற்கு முழுவதுமாக அமலை செடிகளாலும், குப்பைகளாலும் நிரம்பி காட்சியளிக்கின்றது. ஆட்சியர் அலுவலகம் அருகிலே இவ்வாறு இருக்க, வேறு பகுதிகளில் உள்ள நதியின் நிலை இதைவிட மோசமாக உள்ளதாக பொதுமக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

திருநெல்வேலி

இது குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகையில்,"தாமிரபரணி நதியினை காப்பாற்றும் நோக்கத்தில் தாமிரபரணி மீட்புக் குழு என்று அமைத்து பாபநாசத்தில் இருந்து ஸ்ரீவைகுண்டம் வரை ஆற்றினை தூர்வாரி ஆற்றின் இருபக்கங்களிக்கும் மரம் வளர்த்தனர். ஆனால் தற்போது தாமிரபரணி நதி எங்கு இருக்கின்றது என்று தேடும் நிலையில் தான் உள்ளது. ஆற்றை பாதுகாத்தால் மட்டுமே இந்த பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற முடியும்" என்றனர்.

ABOUT THE AUTHOR

...view details