நெல்லைக்கு பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள வந்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பத்திரிக்கையாளர்களிடம் பேசும் போது, "மத்திய அரசு தமிழ்நாட்டில் உள்ள வளங்களை கொள்ளையடிக்க நினைக்கிறார்கள். காஷ்மீர் பிரச்னை உட்பட எல்லா பிரச்னையிலும் தமிழ்நாடு மட்டுமே எதிர் கருத்தை பதிவுசெய்கிறது.
இது அரசு அல்ல தரிசு: சீமான் பேட்டி! - interview
நெல்லை:தமிழ்நாடு மனிதர்கள் மட்டுமல்ல, எந்த உயிரினமும் வாழ முடியாத அளவிற்கு மாற்றப்பட்டு வருகிறது என்பதுதான் உண்மை என்றும் தமிழகத்தில் இருப்பது அரசு அல்ல வெறும் தரிசு என்றும் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டியளித்துள்ளார்
அதனால் இங்குள்ள வளத்தை முடிக்க வேண்டும், ரானுவமயமாக்க வேண்டும் என மத்திய அரசு திட்டமிடுகிறது. அதனால்தான் பூமிக்கு கீழ் கெயில் எரிவாயு, பூமிக்கு மேல் உயர் மின் அழுத்த கோபுரம், மீத்தேன், அணுக்கழிவு, ஸ்டெர்லைட் என்று எல்லாமே நிலத்தையும் காற்றையும் பாழாக்கும் திட்டங்கள் தமிழ்நாட்டில் நிறைவேற்றப்படுகிறது.
தமிழ்நாடு மனிதர்கள் மட்டுமல்ல எந்த உயிரினமும் வாழ முடியாத அளவிற்கு மாற்றபட்டு வருகிறது என்பதுதான் உண்மை, இங்கு இருப்பது அரசு அல்ல வெறும் தரிசு. இங்கு சர்வாதிகார ஆட்சியல்ல, கொடுங்கோல் ஆட்சி நடைபெறுகிறது. ஸ்டெர்லைட் ஆலை விரைவில் திறக்கபட இருக்கிறது.அதற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுவோம்" என்றார்.