தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

9 மாதங்களாகியும் உடற்கூராய்வு அறிக்கை வரவில்லை - ஜெயராஜ் மகள் வேதனை - மதுரை உயர்நீதிமன்ற மதுரை கிளை

திருநெல்வேலி: சாத்தான்குளத்தில் காவல் துறை விசாரணையில் தந்தை மற்றும் சகோதரன் உயிரிழந்து 9 மாதங்கள் ஆகிவிட்ட நிலையிலும் உடற்கூறாய்வு முடிவுகள் வழங்கப்படவில்லை என ஜெயராஜ் மகள் பெர்சி வருத்தம் தெரிவித்தார்.

jeyaraj daghuter percy
jeyaraj daghuter percy

By

Published : Feb 10, 2021, 4:50 PM IST

தூத்துக்குடி சாத்தான்குளத்தைச் சேர்ந்த வணிகர்களான ஜெயராஜ் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி காவல் துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு காவல் துறை தாக்கியதில் உயிரிழந்தனர்.

இதனைத் தொடர்ந்து ஜூன் 24ஆம் தேதி ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் உடல்கள் மூன்று அரசு மருத்துவர்கள் முன்னிலையில் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடற்கூராய்வு செய்யப்பட்டது. உடற்கூராய்வு முடிவுகள் சீலிட்ட கவரில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த முடிவுகளின் அறிக்கைகள் குடும்பத்தினருக்கு வழங்கப்படவில்லை எனக் கூறி ஜெயராஜின் மகள் பெர்சி திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வரிடம் இன்று மனு அளித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எனது சகோதரன் பென்னிக்ஸ், தந்தை ஜெயராஜ் இருவரும் காவல் நிலையத்தில் அடித்துக் கொலை செய்யப்பட்ட நிலையில் அவர்களது உடற்கூறாய்வு முடிந்து 9 மாதங்கள் ஆகிவிட்டன. இதுதொடர்பான வழக்கு மதுரை நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில் விசாரணை வரும் 18ஆம் தேதி நடைபெறவிருக்கிறது.

வழக்கை தொடர்ந்து நடத்த உடற்கூராய்வு முடிவு அறிக்கை தேவைப்படுகிறது. அதனோடு எல்ஐசி பணபலன் பெறுவது உள்ளிட்டவைகளுக்கு உடற்கூராய்வியல் துறையில் அறிக்கை குறித்து கேட்டால் முறையான பதில் தர மறுக்கிறார்கள். உடற்கூராய்வு அறிக்கை பெறுவதற்கான மனுவையே வாங்க மறுக்கிறார்கள். எனவே வேறு வழியின்றி உடற்கூராய்வறிக்கை கேட்டு மருத்துவக் கல்லூரி முதல்வரிடம் மனு அளித்துள்ளோம். உரிய நடவடிக்கை எடுப்பதாக மருத்துவக் கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார். உடற்கூராய்வறிக்கை வழங்கா விட்டால் நீதிமன்றத்தை நாடுவோம்" என தெரிவித்தார்.

பின்னர் சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர் கூறுகையில், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், தலைமை காவலர் முருகன், காவலர்கள் முத்துராஜ், காவலர்கள் செல்லதுரை, வெயிலுமுத்து, தாமஸ் பிரான்சிஸ் , சாமதுரை உள்ளிட்ட 9 பேரின் மீது சிபிஐ தரப்பில் 2 ஆயிரத்து 27 பக்கங்கள் கொண்ட குற்றபத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு தற்போது மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெறும் நிலையில் வரும் 18ஆம் தேதி வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது என தெரிவித்தார்.

இதையும் படிங்க:மினி கிளினிக்கில் ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டார்களா?

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details