ஏப்ரல் 18ஆம் தேதி மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இன்றுடன் இறுதிக்கட்ட தேர்தல் பரப்புரை முடிவடையும் என்பதால் தென்காசி தொகுதி மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணி வேட்பாளர் டாக்டர் கிருஷ்ணசாமியை ஆதரித்து அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தனது இறுதி பரப்புரையை மேற்கொண்டார்.
மு.க.ஸ்டாலினுக்கு முதல்வர் பதவிமேல்தான் மோகம்- சரத்குமார் தாக்கு - மக்களவை தேர்தல்
நெல்லை : அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தனது இறுதி பரப்புரையை தென்காசியில் முடித்தார்.
சரத்குமார்
அப்போது, அடுத்த பத்து வருடங்களுக்கும் மோடி பிரதமராக இருக்க வேண்டும். ஊழலுக்கு பேர் போன காங்கிரஸ் கட்சியை மத்தியில் ஆட்சி அமைக்க விடக் கூடாது. ஸ்டாலினுக்கு முதல்வர் ஆக வேண்டும் என்பதே குறிக்கோளாக உள்ளது, பொது மக்களைப் பற்றி எந்த கவலையும் இல்லை.
எனவே, தாங்கள் அளிக்கின்ற ஓட்டு தென்காசி தொகுதியில் மத்தியிலும் நல்லவர்களை தேர்ந்தெடுப்பதாக இருக்க வேண்டும் எனக் கூறி தனது இறுதி பரப்புரையை முடித்துக்கொண்டார்.