தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நெல்லை எம்பி தொகுதியில் பாஜக கூட்டணியில் சரத்குமார் போட்டியா? - சூசக பேச்சின் ரகசியம் என்ன? - tirunelveli news in tamil

Sarathkumar: சமக கட்சியின் நெல்லை நாடாளுமன்ற பொறுப்பாளராக அக்கட்சியின் தலைவரும், நடிகருமான சரத்குமார் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

sarathkumar
சரத்குமார்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 10, 2023, 11:07 AM IST

Updated : Dec 10, 2023, 1:34 PM IST

சரத்குமார் பேச்சு

திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம் கேடிசி நகர் பகுதியில் சமத்துவ மக்கள் கட்சியின் நாடாளுமன்ற, சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் நிறுவனத் தலைவர் சரத்குமார் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது, “கடந்த 56 ஆண்டுகளாக தமிழகத்தை ஆண்ட திராவிட கட்சிகள் சென்னையில் நீர் வழித்தடங்களை சிறப்பாக செயல்படுத்தவில்லை, பராமரிக்கவில்லை. இலவசங்கள் வழங்குவதைத் தவிர்த்து, அடிப்படை பிரச்னைகள் குறித்து பணியாற்றி இருந்தால், இந்த நிலை சென்னைக்கு ஏற்பட்டிருக்காது.

56 ஆண்டுகள் திராவிட கட்சிகள் ஆண்டுவிட்டனர். சென்னையின் தற்போதைய நிலையை, இன்று மக்கள் விமர்சித்து கொண்டிருக்கின்றனர். பெருமழை நேரத்தில் மக்கள் தங்களுக்கு எதுவும் கிடைக்காததால் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர், பணம் கொடுத்தால் தேர்தல் நேரத்தில் மாறிவிடுகின்றனர்.

ஜனநாயகம் மாறி பணநாயகம் வந்துவிட்டது. 2026 தேர்தலில் 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் நாங்கள் போட்டியிடுகிறோம். அப்போது எங்களைப் பற்றி தெரியும். 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் எங்களது இலக்கு அல்ல, 2026 சட்டமன்றத் தேர்தலே எங்களது இலக்கு. அதில் வெற்றி பெற்று, நான் முதலமைச்சராக பதவி ஏற்பேன்.

2024 நாடாளுமன்றத் தேர்தலில் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட்டு, அனைவரும் அங்கு வந்து உழைத்து, நமது வேட்பாளரை வெற்றி பெற வைப்போம். 7 கோடியே 28 லட்சம் கோடி தமிழக அரசுக்கு கடன் உள்ளது, இதனை எப்போது அடைக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை. கொடி பிடிப்பதற்கும், கோஷம் போடுவதற்கும் தொண்டர்களாக இளைஞர்களைப் பயன்படுத்தி வருகின்றனர்.

வரும் சட்டமன்றத் தேர்தலில் நான் தென்காசி தொகுதியில் நிற்க வேண்டும் என்றால் 30 கோடி, நெல்லை நாடாளுமன்றத் தொகுதியில் நிற்க வேண்டும் என்றால் 100 கோடி ரூபாய் என்ற நிலை தற்போது ஏற்பட்டு விட்டது. வெளிநாடுகளுக்குச் செல்லும் இந்தியர்களுக்கு மதிப்பு ஏற்படுத்தியது, மோடி அரசு. உலகத்தின் பார்வையில் இந்தியாவை உயர்த்தியது, மோடி ஆட்சி.

2026 தேர்தலில் வென்று சமத்துவ மக்கள் கட்சி ஆட்சியில் ஒரு பைசா இலவசத்திற்கு இடமில்லை, இட ஒதுக்கீடு மட்டும் தொடரும். படிப்பு, மருத்துவம் இலவசமாக வழங்கப்படும். நல்லாட்சி வர வேண்டும் என்றால் பண நாயகம் ஒழிந்து, ஜனநாயகம் வர வேண்டும். கட்சிக்காக உழைத்து செலவழித்து நான் தற்போது கடன்காரனாக நிற்கிறேன்” என பேசினார்.

பொறுப்பாளர்களே வேட்பாளர்களாக அறிவிக்கப்பட வாய்ப்பு என சரத்குமார் பேசிய நிலையில், நெல்லை நாடாளுமன்றத் தொகுதி பொறுப்பாளராக சரத்குமார் அறிவிக்கப்பட்டு உள்ளார். மேலும் திராவிடக் கட்சிகளை கடுமையாக விமர்சித்துள்ள சரத்குமார், பிரதமர் மோடியின் ஆட்சி குறித்து புகழ்ந்து பேசியுள்ளார். இதனால் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி பாஜகவுடன் கூட்டணி அமைத்து, சரத்குமார் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க:பாஜக தலைவருக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய நிர்வாகிகள்.. தேனியில் நடந்தது என்ன?

Last Updated : Dec 10, 2023, 1:34 PM IST

ABOUT THE AUTHOR

...view details