தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உக்ரைனில் தவிக்கும் நெல்லை மாணவரை மீட்க கோரிக்கை - russia ukrine crisis news

உக்ரைனில் தவிக்கும் அனைத்து இந்திய மாணவர்களையும் உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் மத்திய மாநில அரசுகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

nellai-student-suffering-in-ukraine
nellai-student-suffering-in-ukraine

By

Published : Feb 25, 2022, 7:37 AM IST

Updated : Feb 25, 2022, 10:35 AM IST

நெல்லை : ரஷ்யா உக்ரைன் நாட்டின் மீது போர்தொடுத்து தாக்குதல் நடத்தி வருகிறது. முக்கிய நகரங்களில் விமானம் மூலம் குண்டுகளை வீசி வருகிறது. இதனால் உக்ரைன் நாட்டில் பதற்றம் ஏற்பட்டுள்ளது இதனிடையே அந்த நாட்டில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் தொழில், வியாபாரம், மற்றும் கல்வி உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது அவர்களின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது. இந்நிலையில் தமிநாட்டை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் மருத்துவப் படிப்பிற்காக உக்ரைன் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் சேர்ந்து படித்து வருகின்றனர். பல்வேறு பகுதியில் குண்டுகள் ஏவுகணை தாக்குதல் நடந்து வருவதால் அங்குள்ள மாணவர்கள் அச்சம் அடைந்ததுள்ளன.

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவ மாணவிகள் தங்களது குடும்பத்தை தொடர்புகொண்டு அங்குள்ள நிலை குறித்து பேசி வருகின்றனர். தாங்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக உருக்கமுடன் தெரிவித்து வருகின்றனர்.

நெல்லை பாளையங்கோட்டையை சேர்ந்த சேகர்செல்வின், அமுதா தம்பதியரின் மகன் மனோ ஜெபத்துரை உக்ரைன் நாட்டில் மருத்துவம் முதலாம் ஆண்டு பயின்று வருகிறார். தற்போது போர் காரணமாக அவரது குடும்பத்தினரும் அச்சம் அடைந்துள்ளனர்.

பாளையங்கோட்டையில் உள்ள அவரது பெற்றோர் கூறுகையில், ”எங்கள் மகன் உக்ரைன் நாட்டில் முதலாம் ஆண்டு படித்து வருகிறான். அங்கு சென்று சில மாதங்கள்தான் ஆகிறது, அங்குள்ள சூழல், கல்லூரி ஆகியவற்றை எங்களுக்கு புகைப்படம் எடுத்து அனுப்புவதுடன், நன்கு படிப்பதாகவும், மகிழ்ச்சியாக இருப்பதாகவும் கூறுவான். நாங்களும் மகிழ்ச்சி அடைந்தோம்.

உக்ரைனில் தவிக்கும் நெல்லை மாணவர்

ஆனால், நேற்று காலை முதல் அங்கு நடக்கும் நிகழ்வுகள் எங்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தொலைபேசியில் தொடர்ந்து பேசிவருகிறான். தற்போது பாதுகாப்பாக இருப்பதாக தெரிவித்துள்ளான். இருந்த போதும் மத்திய மாநில அரசுகள் இதில் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு தனது மகன் மட்டும் அல்லாது அங்கு அச்சத்துடன் இருக்கும் மாணவர்களை மீட்டு தாய்நாட்டிற்கு அழைத்துவர வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க : பெர்லின், கொரியா தற்போது உக்ரைன்: ரஷ்யாவின் போர் தந்திரம்

Last Updated : Feb 25, 2022, 10:35 AM IST

ABOUT THE AUTHOR

...view details