தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நெல்லையில் போக்குவரத்து நெரிசலைக்குறைக்க ரூ.370 கோடியில் பைபாஸ் சாலை:கலெக்டர் ஆய்வு - Nellai District Collector Vishnu study

நெல்லை மாநகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக ரூ.370 கோடியில் மேற்கு புறவழிச் சாலை அமைக்கும் முதல் கட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு ஆய்வு மேற்கொண்டார்.

நெல்லையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ரூ.370 கோடி திட்டம் ரெடி...ஆட்சியர் ஆய்வு
நெல்லையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ரூ.370 கோடி திட்டம் ரெடி...ஆட்சியர் ஆய்வு

By

Published : Sep 13, 2022, 4:24 PM IST

நெல்லை:கடந்த 8ஆம் தேதி நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நெல்லை மாநகரில் போக்குவரத்து நெரிசலைக்குறைப்பதற்காக ரூ.370 கோடி மதிப்பில், நெல்லை மேற்கு புறவழிச்சாலைத்திட்டம் அறிவிக்கப்பட்டு அதற்கான நிலம் எடுப்பு பணி நடந்து வருவதாகத் தெரிவித்தார்.

இந்த நிலையில் மேற்கு புறவழிச்சாலை அமைக்கும் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு நெல்லை, கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் ஜோதிபுரம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் திட்டம் குறித்து நெடுஞ்சாலைத்துறை அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

அதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் விஷ்ணு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், 'முதலமைச்சர் அறிவிப்பை தொடர்ந்து இந்தப்பணிகளை செய்து வருகிறோம். இந்த திட்டம் நெல்லை தேசிய நெடுஞ்சாலை எண் 7இல் தாழையூத்தில் தொடங்கி பொன்னாக்குடி வரை சென்று முடியும் வகையில் மேற்கு புறவழிச்சாலை அமைப்பதற்கு விரிவான திட்ட அறிக்கை அரசிடம் ஒப்புதல் பெறப்பட்டது.

இதில் சங்கரன்கோவில் - தென்காசி - பொட்டல்புதூர் - அம்பாசமுத்திரம் 5 மாநில நெடுஞ்சாலைகள் இணைக்கப்படுகிறது. மூன்று கட்டங்களாக நடைபெறுகின்ற மேற்கு புறவழிச்சாலை திட்டத்திற்காக ரூ.370 கோடியில் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த புறவழிச்சாலையின் மொத்த நீளம் 33.2 கிலோமீட்டர் பணிகளுக்காக 14 வருவாய் கிராமங்களில் இருந்து 96.77 ஹெக்டர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது.

நெல்லையில் போக்குவரத்து நெரிசலைக்குறைக்க ரூ.370 கோடியில் பைபாஸ் சாலை:கலெக்டர் ஆய்வு

பெரும்பாலும் அரசு புறம்போக்கு நிலங்களை அதிகளவில் கையகப்படுத்தப்படுகிறது. தற்போது 30 விழுக்காடு கையகப்படுத்தும் பணி முடிவடைந்துள்ளது. ஏப்ரல் மாதத்திற்குள் நில எடுப்பு பணி முடிவடைந்து சாலை அமைக்கும் பணிகள் தொடங்கும். திட்டப்பணிகள் முழுமையாக இரண்டு ஆண்டுகளில் முடிக்கத்திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சாலையின் குறுக்கே பச்சை ஆற்றின் மேல் ஒரு பாலம் மற்றும் இரண்டு ரயில்வே மேம்பாலங்கள் அமைகிறது’ எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:முன்னாள் அதிமுக அமைச்சர்களுக்கு தொடர்புடைய இடங்களில் தொடரும்லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் பின்னணி

ABOUT THE AUTHOR

...view details