தென்காசி அருகே புல்லுக்கட்டு வலசை சேர்ந்த வேல்ராஜ் மனைவி முத்து பாமா (27). வரதட்சனை கொடுமை காரணமாக நேற்று ( வெள்ளிக்கிழமை) தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாகக் குற்றாலம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை; உறவினர்கள் சாலை மறியல்! - chaos
நெல்லை: வரதட்சனை கொடுமை காரணமாக தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட இளம் பெண்ணின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் தென்காசி பேருந்து நிலையம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்படுத்தியது.
சாலை மறியல்
தென்காசி அரசு பொது மருத்துவமனையில் இன்று உடற்கூறு ஆய்வு நடைபெறுவதாக இருந்த நிலையில், இளம்பெண்ணின் சாவில் மர்மம் இருப்பதாகக் கூறி இளம் பெண்ணின் உறவினர்கள் தென்காசி பேருந்து நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அவர்களை, தென்காசி காவல்துறையினர் அப்புறப்படுத்தி சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இதனைத் தொடர்ந்து உடற்கூறு ஆய்வு முடிந்து இளம் பெண்ணின் உடலைப் பெற்று உறவினர்கள் கலைந்து சென்றனர்.