தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கேஸ் சிலிண்டர் வெடித்த விபத்தில் ஊழியர் உயிரிழப்பு: உறவினர்கள் போராட்டம்

திருநெல்வேலி: கேஸ் சிலிண்டர் வெடித்த விபத்தில் உயிரிழந்த ஊழியரின் உறவினர்கள், இழப்பீடு கேட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உறவினர்கள் போராட்டம்
உறவினர்கள் போராட்டம்

By

Published : Dec 28, 2020, 11:05 PM IST

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள திருவேங்கடத்தில் சரஸ்வதி இண்டேன் கேஸ் ஏஜென்சி உள்ளது. வாடிக்கையாளரிடமிருந்து பழுதான கேஸ் சிலிண்டரை ஊழியர்கள் குடோனுக்கு கொண்டு வந்துள்ளனர்.

அந்த நேரத்தில் குடோனுக்கு அருகே மேலாளர் சமையல் செய்துள்ளார். அப்போது ஊழியர்கள் பசுபதி, காளி ஆகியோர் சிலிண்டரை பழுது நீக்கும் செய்துள்ளனர். சிலிண்டரில் இருந்து தொடர்ந்து கேஸ் கசிந்ததால் எதிர்பாராத விதமாக வெடித்து சிதறியது.

உறவினர்கள் போராட்டம்

இதில் மூன்று பேருக்கு முகம், கைகள் ஆகிய பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு சங்கரன்கோவில் மருத்துவமனையில் முதலுதவி அளித்துவிட்டு, மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அவர்கள் உடலில் 70 சதவீதத்திற்கும் அதிகமாக தீக்காயம் ஏற்பட்டிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இன்று (டிச.28) மேலாளர் வைகுண்டம், ஊழியர் காளி ஆகியோர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். உயிரழந்த காளிக்கு உமா சக்தி என்ற மனைவி, இந்து மதி, இசை ராணி என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். உடல்கூராய்வு முடிந்த பின்னர் காளியின் உறவினர்கள் உரிய இழப்பீடு வழங்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: சிலிண்டர் விலை உயர்வு: ஒப்பாரிவைத்து போராடிய மகளிர் காங்கிரஸ்

ABOUT THE AUTHOR

...view details