தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கருப்பு உருவம் சொன்னதால் மாடியில் இருந்து குதித்த மாணவி - மனநல மருத்துவர் கூறுவது என்ன? - tamil latest news

தூத்துக்குடியில் பள்ளி மாணவி ஒருவர், கருப்பு உருவம் கூறியதாகக்கூறி மாடியிலிருந்து குதித்த விவகாரம் குறித்து மனநல மருத்துவர் விளக்கம் அளித்துள்ளார்.

மருத்துவர் பன்னீர்செல்வன் அளித்த விளக்கம்
மருத்துவர் பன்னீர்செல்வன் அளித்த விளக்கம்

By

Published : Nov 18, 2022, 6:29 PM IST

திருநெல்வேலி: தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே எல்லைநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த 11-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், இரண்டு தினங்களுக்கு முன்பு பள்ளியின் முதலாவது மாடிக்குச் சென்று அங்கிருந்து கீழே குதித்துள்ளார். பின்னர் ஆசிரியர்கள் அவரை மீட்டு திருநெல்வேலியில் தனியார் எலும்பு முறிவு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.

இதுகுறித்து மாணவியிடம் கேட்டபோது, 'தன்னை கருப்பு உருவம் ஒன்று பின் தொடர்வதாகவும் அந்த கருப்பு உருவம் கீழே குதிக்குமாறு தெரிவித்ததால் தான், மாடியில் இருந்து குளித்ததாகவும்' பகீர் தகவலை கூறியுள்ளார். இருப்பினும், இதுகுறித்து காவல்துறை மேற்கொண்ட விசாரணையில் அந்த மாணவி ஏற்கெனவே மனதளவில் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும் அதன் காரணமாகவே குதித்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த விவகாரத்தில் உண்மை தன்மை குறித்து, ஈடிவி பாரத் சார்பில் திருநெல்வேலியைச் சேர்ந்த மனநல மருத்துவர் பன்னீர்செல்வன் அவர்களிடம் கருத்து கேட்கப்பட்டது.

அதற்குப் பதிலளித்த அவர், 'தூத்துக்குடியில் மாணவி ஒருவர் கருப்பு உருவம் கூறியதாக மாடியில் இருந்து குதித்துள்ளதாக தெரிவிக்கின்றனர். பொதுவாக இது மன ரீதியான பிரச்னை தான். மாணவர்களுக்கு கல்வி ரீதியாகவும், குடும்ப ரீதியாகவும் நண்பர்கள் சரியாக தங்களிடம் பேசவில்லை என்பதாலும், மாணவர்களுக்கு இது போன்று மனரீதியான பிரச்னை ஏற்படும்.

எனவே, இது போன்ற தற்கொலை மற்றும் தற்கொலை முயற்சியை தடுப்பதற்கு முதல் கட்டமாக மாணவர்களை மனநல ஆலோசகரிடம் அழைத்துச்சென்று ஆலோசனை பெற வேண்டும். மேலும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் அதிக நேரம் செலவிட வேண்டும்.

மருத்துவர் பன்னீர்செல்வன் அளித்த விளக்கம்

குறிப்பாக, குழந்தைகளின் வேலைகளை அவர்களே பார்த்துக்கொள்ளும்படி விட வேண்டும். அன்பு காட்டுகிறோம் என்ற பெயரில் அவர்கள் வேலையை நாம் செய்யக்கூடாது. சமீப காலமாக குழந்தைகளுக்கு சகிப்புத்தன்மை குறைந்துவிட்டது. குழந்தைகளை நாம் சுதந்திரமாக வளர்க்க வேண்டும்.

பொதுவாக ஆவி வருகிறது, கருப்பு உருவம் தெரிகிறது என்பது நடைமுறையில் சாத்தியம் இல்லை. இந்தியாவில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டவர்களில், ஒரு லட்சம் பேரில் 9 பேர் இறந்து போகின்றனர். அதேபோல் தற்கொலை முயற்சி செய்பவர்களின் எண்ணிக்கை 100 மடங்கு அதிகரித்துள்ளது.

குறிப்பாக 15 வயதில் இருந்து 20 வயது வரை உள்ளவர்கள் தான், அதிகம் தற்கொலை முயற்சியில் ஈடுபடுகின்றனர். எனவே, அதைத்தடுக்க அவர்களின் பிரச்னை குறித்து ஆரம்பத்திலேயே கண்டறிந்து உரிய மனநல ஆலோசனை வழங்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:மருத்துவக் கல்லூரியில் ராகிங் - கண்காணிப்பு குழு அமைத்து ஆய்வு

ABOUT THE AUTHOR

...view details