தமிழ்நாடு, புதுச்சேரி உட்பட 39 மக்களவைத் தொகுதிகளுக்கான பொதுத்தேர்தல் மற்றும் தமிழ்நாட்டில் காலியாக உள்ள 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. தமிழ்நாடு முழுவதும் மக்கள் காலை 7 மணி முதலே வாக்குச்சாவடிகளுக்கு வந்து வாக்களிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் தென்காசி தொகுதிக்கு உட்பட்ட சங்கரன்கோவில் அருகே வடக்குப்புதூரில் 270ஆவது வாக்குச்சாவடியில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது.
நெல்லையில் பழுதான வாக்குப்பதிவு இயந்திரம்: கடுப்பான வாக்காளர்கள் - 2019election
திருநெல்வேலி: சங்கரன்கோவில் அருகே உள்ள வடக்குப்புதூரில் 270ஆவது வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு இயந்திரம் பழுதானதால், இன்று காலை 9 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவில்லை.
Polling machine repair thirunelveli
இதன் காரணமாக இந்த வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு தடைபட்டது. இந்நிலையில் தேர்தல் அலுவலர்கள் அந்த இயந்திரக் கோளாறை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். இதனால் சுமார் இரண்டு மணி நேரமாக அந்த வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு தடைபட்டது. அதன் பின்னர் இயந்திரக் கோளாறு சரிசெய்யப்பட்டு சுமார் 9 மணியளவில் வாக்குப்பதிவு மீண்டும் தொடங்கியது. இதனால் பொதுமக்கள் நீண்ட நேரம் வெயிலில் காத்திருக்கும் நிலைமை ஏற்பட்டது.