திருநெல்வேலி மாவட்டத்தில் குற்றச் செயல்களை குறைக்கவும், பயங்கரவாதிகளின் சதித்திட்டங்களை முறியடிப்பதற்காகவும் அவ்வபோது ‘ஷாமிங் ஆப்ரேஷன்’ என்ற பெயரில் காவல் துறையினர், சிறப்பு சோதனையில் ஈடுபடுவது வழக்கம்.
அந்த வகையில் நேற்றிரவு (அக்.07) நெல்லை ஜங்ஷன், டவுன் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் டவுன் காவல் உதவி ஆணையர் சதீஷ்குமார் தலைமையிலான காவல் துறையினர், தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது, இன்று (அக்.08) அதிகாலை 4 மணியளவில் அவ்வழியாக வந்த கார் ஒன்றை மடக்கி சோதனையிட்டபோது, அதில் 60 லட்சம் ரூபாய் பணம் இருந்தது தெரியவந்தது. இரவு நேரத்தில் இவ்வளவு அதிக தொகை ஏன் எடுத்துச் செல்கிறீர்கள், இந்த பணம் என்ன வகையில் கொண்டுவரப்பட்டது என காவல் துறையினர், காரில் இருந்த நபர்களிடம் விசாரித்தனர்.