தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பல் பிடுங்கப்பட்ட விவகாரம் - 2 தனிப்பிரிவு போலீசார் ஆயுதப்படைக்கு அதிரடியாக மாற்றம்! - armed forces

நெல்லையில் போலீஸ் விசாரணைக்கு வந்தவர்களின் பல் பிடுங்கப்பட்ட விவகாரத்தில், இரண்டு தனி பிரிவு போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

நெல்லையில் போலீஸ் விசாரணைக்கு வந்தவர்கள் பல் எடுக்கப்பட்ட விவகாரம்
நெல்லையில் போலீஸ் விசாரணைக்கு வந்தவர்கள் பல் எடுக்கப்பட்ட விவகாரம்

By

Published : Apr 2, 2023, 6:54 PM IST

திருநெல்வேலி:நெல்லையில் அம்பாசமுத்திரம் காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சமீபத்தில் விசாரணைக்காக அழைத்து வந்தவர்களுக்கு தண்டனையாக அவர்களின் பற்கள் பிடுங்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து சம்மந்தப்பட்டோரின் போதிய ஆதாரங்களைக்கொண்டு, சம்மந்தப்பட்ட அதிகாரியிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதைத்தொடர்ந்து இச்சம்பவத்தில் தொடர்புடைய இரண்டு தனிப்பிரிவு போலீசார் ஆயுதப்படைக்கு அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர். அம்பாசமுத்திரம் காவல் சரகத்திற்கு உட்பட்டப் பகுதிகளில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்களின் பல் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் கடந்த திங்கட்கிழமை முதல், சார் ஆட்சியர் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

பல்வேறு திருப்பங்களுடன் மாநில மனித உரிமை ஆணையம் மற்றும் தேசிய மனித உரிமை ஆணையத்திலும் இது தொடர்பான வழக்குகள் மீது விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட ஏஎஸ்பி, காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில், தற்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் பணியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் இந்த விவகாரம் நடைபெற்ற காவல் நிலையங்களாக கருதப்படும் வி.கே.புரம் மற்றும் கல்லிடைக்குறிச்சி காவல் நிலையங்களில் தனிப்பிரிவு காவலர்களாகப் பணி செய்து வந்த ராஜ்குமார் மற்றும் போகன் ஆகிய இருவரையும் தற்போது ஆயுதப்படைக்கு மாற்றி காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார். மேலும் இது குறித்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:கந்தசாமி நாயுடு அறக்கட்டளை நில மோசடி வழக்கில் பெண் வழக்கறிஞர் கைது

ABOUT THE AUTHOR

...view details