தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஓரினச் சேர்க்கையால் நேர்ந்த விபரீதம்: ஒன்பது வயது சிறுவன் படுகொலை! - police

நெல்லை: ஒன்பது வயது சிறுவனுக்கு ஓரினச் சேர்க்கை பாலியல் துன்புறுத்தல் கொடுத்து படுகொலை செய்த மாயாண்டி என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

crime child murder

By

Published : May 29, 2019, 8:12 AM IST

நெல்லை மாவட்டம் தாழையூத்து அருகே உள்ள குறிச்சிகுளம் கிராமத்தைச் சேர்ந்த தளவாய் - சரோஜா தம்பதியரின் ஒன்பது வயது மகன் கொம்பையா. இவர் அதே பகுதியில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் மூன்றாம் வகுப்பு முடித்து நான்காம் வகுப்புக்குச் செல்லவிருந்தார்.

இந்நிலையில், கடந்த 26ஆம் தேதியன்று வீட்டருகே விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் திடீரென மாயமாகியுள்ளார். எவ்வளவு தேடியும் கிடைக்காத நிலையில், சிறுவனின் பெற்றோர் காவல்துறையிடம் புகார் அளித்தனர்.

இதையடுத்து அவர்கள் நடத்திய விசாரணையில், டிக் டாக் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் அச்சிறுவன் அதிக ஈடுபாட்டுடன் செயல்பட்டு வந்ததாகவும், இதனை பயன்படுத்திக்கொண்ட அதே பகுதியைச் சேர்ந்த மாயாண்டி என்பவர் சிறுவனிடம் செல்ஃபோனைக் காட்டி மறைவாக அழைத்துச் சென்று ஓரினச் சேர்க்கைக்கு வற்புறுத்தியதும் தெரியவந்தது. இதற்கிடையே, அப்பகுதியில் உள்ள முட்புதர் அருகே சிறுவன் தலையில் காயத்துடன் சடலமாக மீட்கப்பட்டார்.

இந்நிலையில், சிறுவனின் தலையில் கல்லைப் போட்டு மாயாண்டி கொலை செய்திருப்பது உறுதியானதையடுத்து, அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details