திருநெல்வேலி:பட்டிமன்ற பேச்சாளரும் இலக்கியவாதியுமான நெல்லை கண்ணன் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் திருநெல்வேலியில் உள்ள அவரது இல்லத்திற்கு வருகை தந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அவரது மகன்கள் மற்றும் உறவினர்களை ஆரத்தழுவி ஆறுதல் தெரிவித்தார்.
பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த சீமான்,”முழுக்க முழுக்க தமிழ் இனம் சார்ந்து நின்றவர், நெல்லை கண்ணன். தமிழ்த்தாய் தன் செல்ல மகனை, தன் அன்பு மகனை இழந்துவிட்டாள் என்பது தான் உண்மை. இந்த தலைமுறை தமிழ் எழுதப்படிக்கத்தெரியாமல் வளர்ந்து வரும் சூழ்நிலையில், இதுபோன்ற தமிழ் ஆளுமைகள் இனி வர முடியுமா” என்றார்.