திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,"மாநில அரசின் கருத்தை பெற வேண்டும், தன்னிச்சையாக செயல்படக்கூடாது. 'ஒரே கட்சி ஒரே நபர் ஆட்சி' என்ற நிலையை நோக்கியே அனைத்து திட்டங்களும் செயல்படுத்தப்படுகிறது. 303 இடங்களை பெற்றபோதிலும் 33% வாக்குகளை மட்டுமே பாஜக பெற்றுள்ளது, 67% மக்கள் பாஜகவிற்கு எதிராக வாக்களித்துள்ளனர் என்பதை எண்ணி செயல்பட வேண்டும். 8 வழிச்சாலை அமைந்தால் மாநில அரசுக்கு நற்பெயர் கிடைக்கும் என்பதற்காக சிலர் செயல்படுகின்றனர் என முதலமைச்சர் கூறுவது தவறானது.
'ஒரே கட்சி ஒரு நபர் ஆட்சி' மத்திய அரசு மூர்க்கத்தனம்! - முத்தரசன்
திருநெல்வேலி: 'ஒரே கட்சி ஒரு நபர் ஆட்சி' என்பதை நோக்கி மத்திய அரசு மூர்க்கத்தனமாக செயல்படுகிறது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.
20% கமிஷனுக்காகவே இத்திட்டம் நிறைவேற்ற முயற்சிக்கப்படுகிறது. உயர் சாதி ஏழைகளுக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றிய மத்திய அரசு 33% இட ஒதுக்கீட்டை பெண்களுக்கு நிறைவேற்ற முயற்சி செய்யவில்லை. இதனை நிறைவேற்ற வலியுறுத்தி அக்டோபர் 2ஆம் தேதி முதல் 4ஆம் தேதி வரை மாதர் சங்கம் சார்பில் மாநில மாநாடு நெல்லையில் நடத்தப்படும்.
முதலமைச்சர், துணை முதலமைச்சர் அணுகுமுறைகளில் மாற்றம் உள்ளது. முதலமைச்சர் மத்திய அரசின் முடிவுகளை அப்படியே செயல்படுத்த நினைக்கிறார். துணை முதலமைச்சர் எதிர்க்கட்சிகளின் வார்த்தைகளுக்கு மதிப்பை அளிப்பதோடு, 10 விழுக்காடு இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவது குறித்து அனைத்துக் கட்சி கூட்டத்தில்கூட, அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைத்து அவர்களின் கருத்துக்களையும் முழுமையாக கேட்டறிந்தார்" என்று கூறினார்.